திருப்பதியில் மீண்டும் இலவச டோக்கன்கள் வழங்கும் பணி தொடக்கம்

 
tirupati

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இலவச டோக்கன்கள் பெற்று சுவாமி தரிசனம் செய்வதற்காக இன்று காலை முதல் திருப்பதி பேருந்து நிலையம் எதிரே உள்ள ஸ்ரீனிவாசம், ரயில் நிலையம் எதிரே உள்ள விஷ்ணு நிவாசம் பக்தர்கள் ஓய்வறைகள், அலிபிரி பூதேவி காம்ப்ளெக்சில் உள்ள இலவச டோக்கன் கவுண்டரில் மீண்டும் இலவச டோக்கன்கள் வழங்கும் பணி அதிகாலை முதல் தொடங்கியது.

tirupati road


இந்த டோக்கன்களை பெறும் பக்தர்கள் அந்தந்த நாட்களில் சுவாமி தரிசனம் செய்யும் விதமாக நேர ஒதுக்கீடு செய்யப்பட்ட டோக்கன்கள் வழங்கப்பட்டு வருகிறது. ஒரு நாளைக்கு 20,000 டோக்கன்கள் வழங்கப்பட உள்ளது. இந்த டோக்கன்கள் இல்லாவிட்டாலும் பக்தர்கள் நேரடியாக திருமலைக்கு சென்றால் வைகுண்டம் காம்ப்ளக்ஸ் வழியாக அனுமதிக்கப்பட்டு சுவாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட உள்ளனர். ஆனால் நேரடியாக எந்த வித டோக்கன்களும் இல்லாமல் வரும் பக்தர்கள் 20 மணி நேரத்திற்கு மேல் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படும் என தேவஸ்தானம் அறிவித்துள்ளார். அவ்வாறு காத்திருக்காமல் இருக்க திருப்பதியில் வழங்கப்படும் இலவச டோக்கன்களை பெற்று சுவாமி தரிசனத்திற்கு வந்தால் நான்கு முதல் ஐந்து மணி நேரத்தில் சுவாமி தரிசனம் செய்யலாம் என தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர்.