லாரி மீது டெம்போ மோதிய விபத்தில் 3 பெண்கள் பலி; 8 பேர் படுகாயம்

 
Three killed in road accident in AP as tempo traveller rams into stationary truck

ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டம் சபாடு அருகே  லாரி மீது டெம்போ வாகனம் மோதியதில் 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 8 பேர் படுகாயமடைந்தனர். ஒருவரின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது. புரோதட்டூர் ஒய்எம்ஆர் காலனியை சேர்ந்த இவர்கள் உறவினர்களுடன் திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு சென்றனர்.

a tempo traveller damaged and slips on the on to one side after the ramming into a truck

திருப்பதிக்கு சுவாமி தரிசனம் சென்ற பிறகு நேற்று இரவு டெம்போ வாகனத்தில் மீண்டும் புரோதட்டூர்  புறப்பட்டனர். இவர்கள் வாகனம் கடப்பா மாவட்டம் சபாடு அருகே சென்றபோது சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டுருந்த லாரி மீது டெம்போ டிரைவர் தூக்க கலக்கத்தில் இருந்ததால் கட்டுப்பாட்டை இழந்து லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது.  இதில் அனுஷா, ஓபுலாம்மா, ராமலட்சுமி ஆகியோர் உயிரிழந்தனர், 

காயமடைந்தவர்கள் புரோதட்டூரில் உள்ள மாவட்ட அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இறந்தவர்களில் ராமலட்சும்மா, ஓபுலாம்மா சகோதரிகள், ராமலட்சுமம்மாவின் மகள் அனுஷா இறந்தனர். காயமடைந்த 7 பேர் புரோதட்டூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து சபாடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.