தெலங்கானாவில் அடுத்தடுத்து நிகழ்ந்த விபத்து - மூவர் பலி

 
accident

தெலுங்கானா மாநிலம் மேட்சல் பகுதியில் சாலையில் அதிவேகமாக சென்ற இருசக்கர வாகனம் சாலையின் நடுவே திடீரென குறுக்க வந்த நபர் மீது மோதி நிலைத்தடுமாறி கீழே விழுந்த நிலையில், பின்னால் வந்த லாரி மோதியதில் மூன்று பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 

தெலங்கானா மாநிலம் மேட்சல் பகுதியில் இன்று அதிகாலை ஒருவர் வாகனங்கள் வருவதை பார்க்காமல் சாலையை கடக்க முயன்றுள்ளார். அப்போது அந்த வழியாக அதிவேகமாக வந்த ஒரு இருசக்கர வாகனம் அந்த நபர் மீது மோதி நிலைத்தடுமாறி சாலையின் நடுவே விழுந்த நிலையில், பின்னால் அதிவேகமாக வந்த டாரஸ் லாரி அவர்கள் மீது ஏறி இறங்கியது. இந்த விபத்தில் இருசக்கர வாகனத்தில் வந்த ஒரு ஆண் மற்றும் பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், இருசக்கர வாகனம் மோதியதில் சாலையை கடக்க முயன்ற நபரும் உயிரிழந்தார். இந்த விபத்தில் மூன்று பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.