#BREAKING கேரளாவில் மூன்றாவது நபருக்கு குரங்கம்மை பாதிப்பு உறுதி

 
monkeypox

கேரளாவில் ஏற்கனவே இருவருக்கு குரம்மை பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில்,  இன்று மேலும் ஒருவருக்கு குரங்கம்மை பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 

குரங்கு அம்மை நோய், விலங்குகளிலிருந்து மனிதனுக்கு பரவும் ஒரு வகை வைரஸ் மூலம் ஏற்படுகிறது. இந்த வைரஸ் முதன் முதலில் காங்கோ நாட்டில் 1970 ஆம் ஆண்டு கண்டறியப்பட்டது. பாதிக்கப்பட்ட விலங்கின் இறைச்சியை முழுமையாக சமைக்காமல் உண்ணுதல், பாதிக்கப்பட்ட விலங்கு கடித்தல், பாதிக்கப்பட்ட விலங்குகளை கையாளுதல் போன்ற காரணங்களால் இந்நோய் மனிதனுக்கு பரவுகிறது. உலகச் சுகாதார நிறுவனம் அளித்த தகவலின்படி, உலக அளவில் 63 நாடுகளில் 9,000க்கும் அதிகமானோருக்குக் குரங்கம்மை தொற்று கண்டறியப்பட்டுள்ளது.  இந்தியாவில் கேரளாவில் மட்டுமே இருவருக்கு  குரங்கம்மை தொற்று கண்டறியப்பட்டுள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து கேரளாவுக்கு வந்த ஒருவருக்கும், துபாய் நாட்டில் வந்த அவருக்கும் குரங்கம்மை நோய் கண்டறியப்பட்டுள்ளது. இருவரும் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சையில் உள்ள நிலையில், அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் தீவிர கண்காணிப்பில் உள்ளனர்.  

monkeypox

இந்நிலையில் இன்று மேலும் ஒருவருக்கு குரங்கம்மை பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த ஜூலை 6ம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து கேரளா வந்த 35 வயதான அந்த நபருக்கு குரங்கம்மை அறிகுறிகள் தென்பட்டதை அடுத்து அவரது பரிசோதனை மாதிரிகள் சேகரிக்கப்பட்டு புனேயில் உள்ள ஆய்வு மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தது. பரிசோதனை முடிவுகள் தற்போது வெளியாகியுள்ள நிலையில், அந்த நபருக்கு குரங்கம்மை இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.