வெளி உணவுகளை தியேட்டர்கள் தடை செய்யலாம் -உச்சநீதிமன்றம்

 
theater

திரையரங்குகளில் மக்களுக்கு குடிநீர் இலவசமாக தரப்பட வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 

Supreme Court: Latest news, Updates, Photos, Videos and more.

கடந்த 2018 ஆம் ஆண்டு ஜம்முகாஷ்மீர் உயர்நீதிமன்றம்,  திரையரங்குகள் மற்றும் மல்ட்டி பிளக்ஸ் திரையரங்கிற்கு படம் பார்க்க வருவோர் வெளியில் இருந்து உணவுகளை எடுத்துவர அனுமதி மறுக்கக்கூடாது என திரையரங்கு உரிமைகளுக்கு உத்தரவிட்டது. அந்த உத்தரவுக்கு எதிராக அகில இந்திய திரையரங்க உரிமையாளர்கள் மற்றும் மல்டிபிளக்ஸ் உரிமையாளர்கள் சங்கம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. 

வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், வெளி உணவுக்கு தடை விதிக்கக்கூடாது என்ற காஷ்மீர் நீதிமன்ற உத்தரவுக்கு எதிரான மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், திரையரங்குகளில் விதிமுறைகளை உருவாக்க உரிமையாளர்களுக்கு முழு உரிமை உள்ளது. அதேபோல் திரையரங்க விதிகளை கடைபிடிக்க திரைப்படம் பார்க்க வருவோருக்கும் கடமை உள்ளது. திரையரங்கில் சுத்தமான குடிநீரை இலவசமாக வழங்கவேண்டும், குளிர்பானம் கொண்டுவருவதை கட்டுப்படுத்த தியேட்டர்களுக்கு உரிமை உண்டு. ஏனெனில் இது வர்த்தக ரீதியான முடிவு. அதேபோல் வெளி உணவுகளுக்கு தடை விதிக்கும் உரிமையும் திரையரங்கிற்கு உண்டு. ஆனால் குழந்தைகளுக்காக கொண்டுவரும் உணவை மட்டும் அனுமதிக்கலாம். திரையரங்கில் பொழுதுபோக்கிற்காக மட்டுமே பார்வையாளர்கள் வருகின்றனர்” என தெரிவித்தது.