‘இது என் மனைவி’என்று மாணவியின் படத்தை முகநூலில் பதிவிட்ட இளைஞர்

 
g

 கேரளாவைச் சேர்ந்த 27 வயது இளம்பெண் பெங்களூரு சதாசிவ நகரில் இருக்கும் இந்திய அறிவியல் நிறுவனத்தில் ஆராய்ச்சி படிப்பு படித்து வந்திருக்கிறார்.  இந்த இளம்பெண் கல்லூரியில் படித்து வந்தபோது கோயம்புத்தூரை சேர்ந்த கணேஷ் குமார் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டிருக்கிறது.  இருவரும் நட்பாக பழகி வந்திருக்கிறார்கள்.

 இதன்பின்னர் ஆராய்ச்சிப் படிப்புக்காக பெங்களூரு சென்று விட்ட பின்னர் கணேஷ்குமார் உடன் பேசுவதை நிறுத்தி இருக்கிறார் அந்த பெண். ஆனாலும் பெங்களூரு சென்று இளம் பெண்ணை சந்தித்து கணேஷ்குமார் தன்னிடம் மீண்டும் தொடர்ந்து பேசும்படி கேட்டிருக்கிறார்.  அதற்கு அந்த இளம்பெண் மறுத்து இருக்கிறார்.

ar

இதனால் ஆத்திரமடைந்த கணேஷ்குமார்,  அந்த பெண்ணின் புகைப்படத்தை தனது தனது முகநூலில் போட்டு,  இது தனது மனைவி என்று பதிவிட்டு இருக்கிறார்.  இதை அறிந்த சில பெண் கேரளாவில் போலீசில் புகார் அளித்திருக்கிறார் இந்த நிலையில் மீண்டும் பெங்களூர் சென்ற கணேஷ்குமார் அந்த பெண்ணை பின்தொடர்ந்து சென்று தன்னை காதலிக்க வேண்டுமென்று தொல்லை செய்திருக்கிறார்.   இதில் எரிச்சல் அடைந்த அந்த பெண் பெங்களூருவில் சதாசிவ நகர் போலீசிலும் கணேஷ் குமார் மீது புகார் கொடுத்திருக்கிறார்.  

 சதாசிவ நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த இளைஞரை கைது செய்துள்ளனர்.  பின்னர் அவர் ஜாமீனில் விடுவிக்கப் பட்டிருக்கிறார்.  இனி அந்த பெண்ணிடம் எந்த தொடர்பும் வைத்துக் கொள்ளக் கூடாது என்ற நிபந்தனையுடன் ஜாமீனில் விடுவிக்கப் பட்டிருக்கிறார்.