கோவில் பூசாரி மீது எச்சில் துப்பிய பெண்

 
க்க்

 கோவில் பூசாரி மீது எச்சில் துப்பிய பெண்ணை தரதரவென்று இழுத்துச் சென்று கோவிலுக்கு வெளியே தள்ளியிருக்கிறார் கோவிலின் அறங்காவலர் .  இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் போலீசாரின் கையில் சிக்கி இருக்கின்றன.  இது குறித்து விசாரணை நடந்து வருகிறது .

  கர்நாடக மாநிலத்தில் பெங்களூரு அடுத்த அமிர்தஹள்ளி என்கிற பகுதியில் லட்சுமி நரசிம்மர் சாமி கோவில்அமைந்திருக்கிறது.  இன்று சாமி கும்பிட சென்ற பெண் ஒருவரை கோவிலில் அறங்காவலர்களில் ஒருவரான முனி கிருஷ்ணா அப்பா என்பவர் அடுத்த துன்புறுத்தி இருக்கிறார்.

ல்

 அந்தப் பெண்ணின் தலை முடியை பிடித்து இழுத்தபடி கோவிலில் இருந்து தரதரவென்று இழுத்துச் சென்று வெளியே விட்டிருக்கிறார். இது தொடர்பான சிசிடிவி காட்சிகளை பார்க்க போலீசார் கைப்பற்றியுள்ளனர்.  

முனி கிருஷ்ணா என்பவர் தன்னிடம் கடுமையாக நடந்து கொண்டார் என்று புகாரியில் பெண் கூறி இருக்கிறார்.  குளிக்காமலோ தூய்மையாக கோவிலுக்கு வரக்கூடாது என்று கூறியிருக்கிறார் அதை மீறி பெண்கள் சொல்லவும் கோவிலுக்குள் உன்னை அனுமதிக்க முடியாது நீ கருப்பாக இருக்கிறாய் என்று சொல்லி திட்டியும் அடித்தும் துன்புறுத்தி இருக்கிறார்.

இரும்பு கைத்தடியை கொண்டு அடிக்க பாய்ந்து இருக்கிறார் இதை கோவில் பூசாரிகள் தடுத்து இருக்கிறார்கள் . இது பற்றி வெளியே சொன்னால் உன்னையும் கணவரையும் கொலை செய்து விடுவேன் என்றும் மிரட்டி இருப்பதாக கூறப்படுகிறது.

 அந்த பெண்  கோவிலில் அத்துமீறி நுழைந்து சென்று  என் மீது சாமி வந்து விட்டார் . அதனால் வெங்கடேஸ்வராயர் எனது கணவர்.  கோவில் கருவறையில் வெங்கடேசன் சிலை அருகே நான் அமர வேண்டும் என்றார்.  பூசாரிகள் அவரை விடவே இல்லை.  அதை தடுத்து நிறுத்திய போது ஆத்திரமடைந்து பூசாரிகளில் ஒருவர் மீது அந்த பெண் எச்சில் துப்பினார்.  பலமுறை அவரை வெளியே செல்லும்படி பணிவாக கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்.  அதை அவர் கேட்கவில்லை. ஆனால் அப்பெண்ணை கட்டாயப்படுத்தி வெளியே எடுத்துச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டு இருக்கிறது.   புகாரை பெற்றுக் கொண்ட போலீசார் பெண் மீது தாக்குதல் நடந்த சிசிடிவி காட்சி பதிவுகளை வைத்து ஆய்வு செய்து வருகின்றனர்.