துணை முதல்வர் மனைவிக்கு 2 ஆண்டுகளாக தொல்லை கொடுத்த பெண்

 
de

 துணை முதல்வர் மனைவி தேவேந்திர பட்னவிஸ் மனைவி அம்ருதா.   இவர் பேஸ்புக் ,இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைத்தள பக்கங்களில் கணக்கு வைத்திருக்கிறார்.  அம்ருதாவின் பேஸ்புக் பக்கத்தில்  சிலர் கடந்த இரண்டு ஆண்டுகளாக அவதூறு கருத்துக்கள் பதிவிட்டு வந்துள்ளனர்.   இது குறித்து போலீசார் நடத்தி வந்த விசாரணையில் ஸ்மிருதி பஞ்சால் என்கிற ஒரே ஒரு பெண் தான் என்பது தெரிய வந்திருக்கிறது.   இதை எடுத்து அந்த பெண்ணை போலீசார் கைது செய்தனர்.  கைது செய்யப்பட்ட ஸ்மிருதி போலி பேஸ்புக் கணக்குகளை உருவாக்கி இருந்திருக்கிறார் என்பது தெரிய வந்திருக்கிறது.  போலி இமெயில் கணக்குகளை உருவாக்கி அம்ருதா பற்றி அவதூறு பரப்பி வந்திருக்கிறார் என்பதும் தெரிய வந்திருக்கிறது.   இதை அடுத்து கைது செய்யப்பட்ட  ஸ்மிருதியை போலீசார் சிறையில் அடைத்துள்ளனர்.

am

 மகாராஷ்டிராவில் முதல்வர் ஏக்நாத் சிண்டே தலைமையில் சிவசேனா அதிருப்தி குழு -பாஜக கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது.   பாஜகவை சேர்ந்த தேவேந்திர பட்னவிஸ் துணை முதல்வராக உள்ளார்.   இவரின் மனைவி அம்ருதா பட்னவிஸ்.  இவர்  சமூக வலைதள பக்கங்களில் கணக்குகள் வைத்துள்ளார்.   

 அம்ருதாவின் முகநூல் பக்கத்தில் பலர் தொடர்ந்து அவதூறு கருத்துக்களை பதிவிட்டு வந்துள்ளனர்.   இது குறித்து அம்ருதா அளித்த புகாரில் போலீசார் நடத்திய விசாரணையில் அது ஸ்மிருதி பஞ்சால்(50) என்கிற ஒரே ஒரு பெண் தான் என்பது தெரிய வந்தது.   இதை அடுத்து மும்பை சைபர் கிரைம் போலீசார் அம்ருதா மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.  அவரிடம் நடத்திய விசாரணையில் 53 போலி பேஸ்புக் கணக்குகளும் , 13 போலி ஜிமெயில் கணக்குகளும் தொடங்கி அம்ருதா குறித்து அவதூறு பரப்பி வந்ததாக தெரிய வந்திருக்கிறது.   இதை அடுத்து அம்ருதாவை கைது செய்து போலீசார் சிறையில் அடைத்துள்ளனர். 

 மகாராஷ்டிரா மாநிலத்தில் இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.