மனைவியுடன் படுக்கையில் நெருக்கமாக இருந்த வீடியோ லீக் - கதறி அழுத எம்.பி.

 
a

 செய்தியாளர்களிடம் பேசியபோது கதறி அழுதிருக்கிறார் பாகிஸ்தான் எம்பி ஆசம் சுவாதி(75).   மனைவியுடன் படுக்கையறையில் நெருக்கமாக இருந்த அந்தரங்க வீடியோவை யாரோ ஒருவர் எடுத்து தன் மனைவியின் செல்போனுக்கே அனுப்பி வைத்திருக்கிறார் என்று சொல்லி கதறி அழுதிருக்கிறார்.

 பாகிஸ்தான் நாட்டின் முன்னாள் பிரதமரும்,  பாகிஸ்தான் தெஹ்ரீக் - இ - இன்சாப் கட்சியின்  தலைவருமான இம்ரான்கானின் தீவிர ஆதரவாளர் ஆசம் சுவாதி எம்பி. இவர் அந்த கட்சியின் எம்பியாக உள்ள ராணுவ ஜெனரல் குவாமர் ஜாவித் பாஜ்வாவை சமூக வலைதளத்தில் விமர்சித்ததற்காக  கடந்த மாதம் கைது செய்யப்பட்டிருந்தார்.   அப்போது அவரது ஆடைகள் களையப்பட்டு கேலிக்கும் சித்திரவதைக்கும் ஆளானதாக ஜாமீனில் வெளிவந்த ஆஸம் சுவாதி தெரிவித்திருந்தார்.

mp

 இந்த நிலையில் நேற்று காலையில் செய்தியாளர்கள் சந்திப்புக்கு  ஏற்பாடு செய்துள்ளனர்.   அப்போது ஆதம் சுவாதி,  நேற்று இரவு அடையாளம் தெரியாத எண்ணில் இருந்து என் மனைவியின் செல்போனுக்கு ஒரு வீடியோ வந்தது .  அந்த வீடியோவில் நானும் என் மனைவியும் படுக்கையில் நெருக்கமாக இருந்த காட்சிகள் சம்பந்தப்பட்டிருக்கின்றன.   இதைக் கண்டு என் மனைவி அதிர்ச்சி அடைந்தார். நானும் என் மனைவியும் கோட்டா சென்ற போது இந்த வீடியோ எடுக்கப்பட்டிருக்கின்றது.  

 என் பேச்சை நாட்டில் உள்ள பெண்களும் கேட்டுக் கொண்டிருப்பார்கள் என்பதால் இதற்கு மேல் அந்த அசிங்கத்தை என்னால் விவரிக்க முடியவில்லை என்று கூறியிருக்கிறார் எம்பி.  செய்தியாளர்களிடம் பேசிக் கொண்டிருக்கும் போதே ஆசம் சுவாதி எம்பி கதறி அழுகிறார்.   

ஆனால், இந்த வீடியோ போட்டோஷாப் மென்பொருள் வாயிலாக போலியாக உருவாக்கப்பட்டிருக்கிறது என்று பாகிஸ்தானின் புலனாய்வு முகமை தெரிவித்திருக்கிறது.

 பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் இந்த சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்து இருக்கிறார்.  பாகிஸ்தான் சார்பில் ஆசம் சுவாதி மனைவியிடம் மன்னிப்பு கேட்பதாக தெரிவித்திருக்கிறார்.