மகளை கடத்தி மொட்டை அடித்து விரட்டி விட்ட பெற்றோர்

 
ma

காதல் கணவனுடன் வசித்து வந்த மகளை கடத்திச் சென்று மொட்டை அடித்து கொடுமைப்படுத்தி  விரட்டி விட்ட பெற்றோரை கைது செய்ய போலீசார் தேடி வருகின்றார்கள்.  

 தெலுங்கானா மாநிலத்தில் ஜெகத்தியாலா மாவட்டத்தில் உள்ள பாலபள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் மாதவ்.   இந்த இளைஞர் பக்கத்து ஊரை சேர்ந்த அட்சிதா என்கிற பெண்ணை காதலித்து,  கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டிருக்கிறார்.

at

 பெற்றோர்களின் சம்மதம் இல்லாமல் திருமணம் செய்து கொண்டு இருவரும் தனி வீடு எடுத்து வசித்து வந்திருக்கிறார்கள்.   தங்களுக்கு விருப்பம் இல்லாத நபரை காதலித்து திருமணம் செய்து கொண்ட மகள் மீது பெற்றோர் கடும் ஆத்திரத்தில் இருந்திருக்கிறார்கள்.   அச்சிதாவின் உறவினர்களும் ஆத்திரத்தில் இருந்திருக்கிறார்கள்.

இதனால் இரண்டு கார்களில் அச்சிதாவின் உறவினர்களும் பெற்றோரும் அட்சிதா வசித்த வீட்டிற்கு சென்று இருக்கிறார்கள்.  அப்போது அச்சுதாவின் பெற்றோர் பெண்ணை கடுமையாக திட்டி மிரட்டி இருக்கிறார்கள்.   காரில் வந்து ஏறச் சொல்லி இருக்கிறார்கள்.   வர முடியாது என்று அச்சிதா மறுக்கவும்,  வலுக்கட்டாயமாக காரில் கடத்திச் சென்று இருக்கிறார்கள்.

 வீட்டிற்கு அழைத்துச் சென்றதும் அட்சிதாவுக்கு பாலில் தூக்க மாத்திரைகள் கலந்து கொடுத்து இருக்கிறார்கள்.   பாலை குடித்து  மயங்கியதும்,  அவரின் தலைமுடியை மொட்டை அடித்திருக்கிறார்கள்.   பின்னர் அவரை அவமானப்படுத்தி இப்போது போ என்று கணவர் வீட்டிற்கு விரட்டி விட்டிருக்கிறார்கள்.

 இதை அடுத்து அச்சுதா நேராக போலீசில் சென்று புகார் அளித்திருக்கின்றார்.   போலீசார் வழக்கு பதிவு செய்து  மொட்டை அடித்து  கொடுமைப்படுத்திய அவரின்  பெற்றோர்,  தாய்மாமன் ஆகியோரை கைது செய்ய தேடி வருகின்றார்கள்.