தாயின் உடலை மரப்பலகையில் கட்டி 80 கி.மீ. பைக்கில் கொண்டு சென்ற மகன்

 
b

 நூறு ரூபாய்க்கு மரப்பலகை வாங்கி அதில் தாயின் உடலை வைத்து கயிற்றால் கட்டி தனது பைக்கிலேயே வைத்து  80 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள கிராமத்திற்கு சென்று இருக்கிறார் மகன்.   அரசு  அமரர் ஊர்தி தராததால்,  தனியார் ஆம்புலன்ஸ் 5000 ரூபாய் கேட்டதால் அதை கொடுக்க முடியாததால் இந்த அவலம் நிகழ்ந்திருக்கிறது.   மத்திய பிரதேச மாநிலத்தில்  இந்த அவலம் நிகழ்ந்திருக்கிறது.

bb

அனுப்பூர் மாவட்டம் கோடாரு  கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெய் மந்த்ரி யாதவ். இந்த பெண்ணுக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதை அடுத்து இவர் அனுப்பூர் மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.   அவரின் மகன் சுந்தர் யாதவ் மருத்துவமனையில் கொண்டு போய் சேர்த்திருக்கிறார்.   மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்ட ஜெய்மந்த்ரிக்கு  உடல்நிலை மோசமடைந்தும்,   மருத்துவர்களின் பரிந்துரையின் பேரில் ஷாடோல் மாவட்டத்தில் இருக்கும் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்திருக்கிறார். 

 அங்கு தீவிர சிகிச்சை அளித்தும்  சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இரவு ஜெய்மந்த்ரி உயிரிழந்திருக்கிறார்.  இந்த மருத்துவமனையில் இருந்து 80 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள கோடாரு  கிராமத்திற்கு ஜெய் மந்த்ரியின் உடலை எடுத்துச் செல்ல மருத்துவமனை நிர்வாகம் அமரர் உறுதி தரவில்லை.   தனியார் ஆம்புலன்ஸில் எடுத்துச் செல்ல முயன்ற போது அவர்கள் ஐயாயிரம் ரூபாய் கேட்டதால் அந்தப் பணத்தை கொடுக்க சுந்தர் யாதவால் முடியவில்லை. 

bb

இதனால் 100 ரூபாய்க்கு ஆறு அடி நீள மரப்பலகை வாங்கி அதன் மேல் தாயின் உடலை வைத்து கயிற்றால் கட்டி பின்னர் பைக்கில் தூக்கி வைத்து பின்னால்  சகோதரர் பிடித்துக்கொள்ள,   சுந்தர்ராஜ் பைக்கினை ஓட்டிச் சென்று இருக்கிறார் .  80 கிலோமீட்டர் இப்படி சென்று தாயின் உடலை வீட்டில் சேர்த்து இருக்கிறார் மகன்.

 பைக்கில் சடலத்தை எடுத்துச் செல்லுவதை கண்ட சிலர்  செல்போனில் வீடியோவாக எடுத்து வலைத்தளத்தில் பகிர்ந்து உள்ளனர்.   ஷாடோல்  மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பலரும் கண்டம் தெரிவித்து வருகின்றனர். மேலும்,  அனைத்து வசதிகள் இருந்தும் முறையான சிகிச்சை அளிக்கப்படுவதில்லை என்ற புகாரும் எழுந்திருக்கிறது.