பட்டாக்கத்தியுடன் பள்ளிக்கு வந்த தலைமை ஆசிரியர்

 
ka

பட்டாக்கத்தியுடன் பள்ளிக்கு வந்த தலைமை ஆசிரியரால் பள்ளி மாணவர்களிடையே பரபரப்பும் பதற்றமும் ஏற்பட்டிருக்கிறது.    பள்ளியின் தலைமை ஆசிரியர் ஒருவர் பட்டாகத்தியுடன் பள்ளிக்கு வந்த   வீடியோ வலைத்தளங்களிலும் வைரல் ஆகி வருகிறது. 

 அசாம் மாநிலத்தில் சச்சார் மாவட்டம்.   அம் மாவட்டத்தின் தொடக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியர் திரிதிமேதா தாஸ்(38).  இவர் சில்சார் மாவட்டம் தாராப்பூர் பகுதியைச் சேர்ந்தவர்.  அதே பள்ளியில் 11 ஆண்டுகள் வேலை பார்த்து வருகிறார்.

ch

இந்த நிலையில் சம்பவத்தன்று ஆத்திரத்தில் அந்த தாய்மையாசிரியர் பள்ளிக்கூட வளாகத்திற்குள் ஆவேசமாக பட்டாகத்தியுடன் நுழைந்த போது , அதைக்கண்டு சக ஆசிரியர்கள்,  மாணவ-மாணவிகளும் அச்சம் அடைந்துள்ளனர்.   உடனே சக ஆசிரியர்கள் போலீசுக்கு போன் தெரிவித்திருக்கிறார்கள்.  போலீசார் விரைந்து வந்து தலைமை ஆசிரியரை பிடித்து விசாரித்த போது தான் அந்த விபரம் தெரியவந்தது.

சக ஆசிரியர்களின் முறைகேடுகளால் கோபமடைந்து விரக்தி அடைந்து விட்டதாகவும் அதனால்தான் கத்தியை காட்டி எச்சரிக்க முயன்றதாகவும் கூறியிருக்கிறார். தலைமை ஆசிரியர்  ஒருவர் பட்டாக்கத்தியுடன் பள்ளிக்கு வந்தது அது சமூக வலைத்தளங்களில் வைரலான நிலையில் அவரை பணி இடைநீக்கம் செய்ய கல்வித்துறை உத்தரவிட்டிருக்கிறது.   ஆனாலும் அவர் மீது யாரும் புகார் கொடுக்கவில்லை என்பதால் போலீசார் அவர்  மீது கைது நடவடிக்கை எதுவும் மேற்கொள்ளவில்லை.