பாலியல் இன்பத்தை அனுபவிக்க முடியாமல் செய்த அரசு 10 ஆயிரம் கோடி ரூபாய் கொடுக்கணும் - நஷ்ட ஈடு கேட்கும் வாலிபர்

 
க்ஷ்

போலியான பாலியல் வழக்கில் தன்னை இரண்டு ஆண்டுகள் சிறைக்கு அனுப்பி விட்டதால் அந்த இரண்டு ஆண்டுகள் பாலியல் இன்பத்தை இழந்து விட்டதால் பத்தாயிரம் கோடி ரூபாய் இழப்பீடு தர வேண்டும் என்று மத்திய பிரதேசம் மாநில அரசு மீது வாலிபர் வழக்கு தொடர்ந்திருக்கிறார்.

 மத்திய பிரதேச மாநிலத்தில் பழங்குடி இனத்தைச் சேர்ந்தவர் கந்து.   35வயதான் இந்த வாலிபர் கூட்டாளியுடன் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்ததாக பெண் அளித்த புகாரில் இரண்டு ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.

க்

 கடந்த 2018 ஆம் ஆண்டு பெண் அளித்த புகாரில் கந்துவும் அவரது  தோழன் பர்னுவும் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.  பெண் அளித்த பாலியல் புகாரின் தலைமறைவாக இருந்து வந்து கந்து கடந்த 2020 ஆம் ஆண்டு டிசம்பர் 23ஆம் தேதி அன்று கைது செய்யப்பட்டார்.  அவரின் கூட்டாளியும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

 இந்த வழக்கு ரத்திலம் செஷன்ஸ் நீதிமன்றத்தில் நடந்து வந்தது.   கடந்த அக்டோபர் மாதம் 10ஆம் தேதி இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது.   அப்போது கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் சிறையில் தண்டனை அனுபவித்து வரும் கந்து , அவரின் தோழன் மீதான குற்றங்களை அரசு தரப்பினால் நிரூபிக்க முடியாததால் இரண்டு வருட சிறை வாழ்க்கைக்கு  பின்னர் இருவரையும் விடுவித்தது நீதிமன்றம்.

 சிறையில் இருந்து வெளியே வந்த கந்து,  சிறையில் தான் பட்ட துன்பங்களுக்காக சிறை தண்டனையால் தனக்கு நேர்ந்திருக்கும்  நோய்க்காக 6 கோடி ரூபாய் இழப்பீடு கேட்டு வழக்கு தொடர்ந்து இருக்கிறார்.   மேலும்,   இரண்டு ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டதால்  கடவுள் கொடுத்த வரமான பாலியல் இன்பத்தை அனுபவிக்க முடியாமல் செய்து விட்டதற்காக மத்திய பிரதேச அரசு தனக்கு பத்தாயிரம் கோடி ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் வழக்கு  தொடர்ந்திருக்கிறார்.

 கந்துவின் இந்த வழக்கு மத்திய பிரதேச மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.