காய்கறிகள் மீது சிறுநீர் பெய்து விற்கும் வியாபாரி -அதிர்ச்சி வீடியோ

 
t

prison


பானி பூரி வியாபாரி,  பானி பூரியில் வைத்து சாப்பிடும் தண்ணீருக்காக சிறுநீரை பெய்து கொடுத்த அதிர்ச்சி வீடியோ வைரலாகி உணவு பிரியர்களை கதற வைத்தது. அதன் பின்னர் எச்சில் தொட்டு,   எச்சிலை துப்பி பரோட்டா போடுவது, சப்பாத்தி போடுவது என்பது போன்ற வீடியோக்களும் வெளியாகி உணவு பிரியர்களை அதிர வைத்தது.

 இந்த நிலையில் அனைத்து தரப்பு மக்களையும் அதிர வைத்திருக்கிறது காய்கறிகள் மீது சிறுநீரை கழித்து விற்கும் வியாபாரியும் அந்த அதிர்ச்சி வீடியோ.  உத்தரப்பிரதேச மாநிலத்தில் பரோலி மாவட்டத்தில் நடந்திருக்கிறது இப்படி ஒரு சம்பவம்.


 ஷரீப் கான் என்கிற முதியவர் தள்ளு வண்டியில் வைத்து காய்கறியை விற்பனை செய்து வருகிறார்.   பல ஆண்டுகளாக அதே பகுதியில் காய்கறி பழங்களை தள்ளுவண்டி வைத்து தள்ளு வண்டியில் வைத்து விற்பனை செய்து வருகிறார் இந்த நிலையில் பரேலியில் இருக்கும் இஸ்லாத் நகர் பகுதியைச் சேர்ந்த துர்க்கேஸ் குப்தா என்பவர் கவலையாக காரில் சென்று இருக்கிறார்.  

 அப்போது 45 வயது மதிக்கத்தக்கது வியாபாரி,  காய்கறிகள் மீது சிறுநீர் கழிப்பதை பார்த்து இருக்கிறார்.   உடனே அவர் காரை நிறுத்திவிட்டுஅதை தனது செல்போனில் வீடியோவாக எடுத்திருக்கிறார்.  அதன் பின்னர் அந்த வியாபாரிடம் சென்று ஏன் இப்படி மோசமாக நடந்து கொள்கிறாய் என்று கேட்டதற்கு,  தான் அப்படி செய்யவே இல்லை என்று அடித்துச் சொல்லியிருக்கிறார்.  அதன் பின்னர் வீடியோ ஆதாரத்தை காட்டி இருக்கிறார் .  அப்போதும் தான் இந்த தவறும் செய்யவில்லை என்று சொல்லி ஆத்திரப்பட்டிருக்கிறார்.

 இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது .  இதை கேட்டு அப்பகுதியில் ஓடி வந்து சண்டை வளர்க்கிறீர்கள் என்று கேட்டதற்கு அவர் செய்த காரியத்தை சொல்லி இருக்கிறார் .  இதைக் கேட்ட பகுதி மக்கள் நம்பவில்லை பின்னர் வீடியோ ஆதாரத்தை காட்டி இருக்கிறார் இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த பகுதி மக்கள்   போலீசுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். 

 அதன் பின்னர் போலீசார் நடத்திய விசாரணையில் தனக்கு உடல்நிலை சரியில்லை என்றும்,  அதனால் வண்டியை ஒரு பக்கம் பிடித்துக் கொண்டு சிறுநீர் கழித்தேன் என்று சொல்லி இருக்கிறார்.   இதன்பின்னர்  போலீசார் கைதுக்கு பின்னர் நீதிமன்றத்தில்  ஆசிரியர் படுத்தப்பட்டுள்ளார் அந்த வியாபாரி.