நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் ஜனவரி 31 ஆம் தேதி தொடக்கம்

 
Parliament

2023-24ம் ஆண்டுக்கான நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் ஜனவரி 31 ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 6ம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த ஆண்டுக்கான பட்ஜெட்டை பிப்ரவரி 1ம் தேதி மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் தாக்கல் செய்ய உள்ளார்.  கொரோனா பரவலுக்கு பிறகு இந்த ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளதால் இளைஞர்கள் பல எதிர்பார்ப்புகளை கொண்டுள்ளனர்.இந்நிலையில், 2023-24ம் ஆண்டுக்கான நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடர் ஜனவரி 31 ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 6ம் தேதியுடன் நிறைவு பெறுகிறது. 

தற்போது இந்த பட்ஜெட் தயார் செய்வதற்கான பணிகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. இதற்காக நிதி அமைச்சக அதிகாரிகள் அனைத்து துறை அதிகாரிகளுடனும் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர். இதில் ரயில்வே வாரிய அதிகாரிகளும் தங்களது கோரிக்கைகளை முன் வைத்துள்ளனர். அதன்படி, இந்த முறை ரயில்வே பட்ஜெட்டில் 30% கூடுதல் ஒதுக்கீடு வழங்க வேண்டும் என அரசிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.