பத்து ரூபாயால் மணமேடையில் மாட்டிய மணமகன்- நின்று போனது திருமணம்

 
d

 பத்து ரூபாய் பணக் கட்டை எண்ண  தெரியாததால் மணமேடையில் படிக்காதவர் என்பது அம்பலமானதால் திருமணம் நின்று போய் இருக்கிறது.   உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் நடந்திருக்கிறது இப்படி ஒரு சம்பவம்.

 உத்தரப்பிரதேச மாநிலத்தில் பருக்காபாத் மாவட்டத்தில் தொல்காப்பூர் என்கிற கிராமம்.   இக்கிராமத்தை சேர்ந்த பெண்ணுக்கு நன்கு படித்து விட்டு நல்ல வேலையில் இருக்கிறார் என்று ஒரு இளைஞரை பேசி முடித்து இருக்கிறார்கள்.    கொத்தவாளி என்கிற பகுதியில் கடந்த 19ஆம் தேதி திருமணத்திற்கான ஏற்பாடுகளும் நடந்திருக்கின்றன.  

t

 திருமணத்திற்கு முந்தைய நாள் திருமண சடங்குகளில் மாப்பிள்ளை குதிரையில் ஏறி ஊர்வலமாக சென்று இருக்கிறார்.   இந்த சடங்குகளின் போது மணமகன் படித்தவரா என்பது குறித்த சந்தேகம் ஏற்பட்டிருக்கிறது மணமகளின் சகோதரருக்கு.   பொய் சொல்லி திருமணத்தை நடத்தி வைக்கிறார்களா என்ற சந்தேகம் இருந்ததால் இதை இப்போதே தெளிவு பெற்று விட வேண்டும் என்று முடிவுக்கு வந்திருக்கிறார்.

அதனால்,  திருமண புரோகிதர் இடம் பத்து ரூபாய் பணக்கட்டை கொடுத்து அதை மணமகளிடம் கொடுத்து எண்ணி வாங்கிக் கொள்ளுங்கள் என்று கூறியிருக்கிறார். புரோகிதரும் மணமகளிடம் சென்று பத்து ரூபாய் தாள் கட்டுகளை கொடுத்து இதை சரியாக எண்ணிக் கொடுங்கள் என்று சொல்லி இருக்கிறார்.   அதை எண்ணத் தெரியாமல் தடுமாறி இருக்கிறார் மணமகன்.   இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த மணமகள் குடும்பத்தினர் மேற்கொண்டு விசாரித்த போது மணமகன் படிக்காதவர் என்பது தெரிய வந்திருக்கிறது. 

படிக்காத மாப்பிள்ளை தனக்கு வேண்டாம் என்று மணமகள் ஆத்திரப்பட,  திருமணம் நின்று போய் இருக்கிறது.   தங்களை ஏமாற்றி விட்டதாக மணமகன் மற்றும் அவரது குடும்பத்தார் மீது போலீசில் புகார் அளித்துள்ளனர்.  இது குறித்த விசாரணை நடந்து வருகிறது.