கேரளாவில் நரபலி கொடுக்கப்பட்ட பெண்ணின் உடல் ஒரு மாதத்துக்கு பின் உறவினரிடம் ஒப்படைப்பு

 
கேரளாவில் நரபலி

கேரள மாநிலத்தில் தமிழக பெண் உட்பட இரண்டு பெண்கள் நரபலி  கொடுக்கப்பட்டு புதைக்கப்பட்டதாக வெளியான செய்திகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

கேரளாவில் நரபலி கொடுக்கப்பட்ட தமிழக பெண்... அடையாளம் காண முடியாத அளவுக்கு  அழுகிய உடல்! | Two Kerala women were brutally human sacrificed |  Puthiyathalaimurai - Tamil News | Latest ...

இந்நிலையில் தருமபுரியை சேர்ந்த பத்மா என்ற பெண்ணை நரபலி கொடுக்கப்பட்டவர் என முதலில் தகவல் வெளியானது,  மேலும் பத்மா என்பவர்  தருமபுரி மாவட்டத்தில் எந்த ஊரை சேர்ந்தவர் என்ற தகவல் தெரியாமல் இருந்த நிலையில், நாகவதி அணை அருகேவுள்ள எர்ரப்பட்டி கிராமத்தை சேர்ந்த ரங்கன் (70) என்பவரது மனைவி பத்மா என்பது தெரிய வந்தது, இதனை தொடர்ந்து சம்மந்தபட்ட எர்ரப்பட்டி கிராமத்திற்கு பெரும்பாலை போலீசார், உளவுப்பிரிவு போலீசார், வருவாய்த்துறையினர் விசாரணை நடத்தினர்.

விசாரனையில்  தோட்ட வேலைக்கு சென்ற பத்மா கேரளாவில் நரபலி கொடுக்கப்பட்டார் என்ற தகவல் கேரள மற்றும் தமிழக ஊடங்களில் அடுத்தடுத்து செய்திகள் வெளியானதை தொடர்ந்து கிராமமே பரபரப்புக்குள்ளானது. பத்மாவின் உடலை அடையாளம் காண, பத்மாவின் மகன்களான சேட்டு, செல்வராசு, பத்மாவின் தங்கை பழனியம்மாள், உறவினர்கள், முத்து, தட்சினாமூர்த்தி, ராமு, முனியப்பன்,காசி ஆகியோர் கேரளாவிற்கு சென்றனர். கணவன் ரங்கன் மற்றும் பத்மா ஆகேியார் கடந்த இருபது வருடகளுக்கு மேலாக கேரளாவில் பணிபுரிந்து வருவதாகவும், தீபாவளி, பொங்கல், மற்றும் வீட்டு விசேசங்கள், கோவில் திருவிழாக்களுக்கு அவ்வப்போது சொந்த ஊருக்கு வந்து செல்வார்கள் என்றும் வயது மூப்பு காரணமாக ரங்கன் சொந்த கிராமமான எர்ரப்பட்டி கிராமத்திலேய இருந்து வருவதாகவும், பத்மா மற்றும் அவரது தங்கை பழனியம்மாள் ஆகியோர் கேரளாவில் பணி செய்து வந்ததாகவும் கூறப்பட்டது.

இந்தநிலையில் பத்தினம் திட்டா என்ற பகுதியில்  புதைக்கப்பட்ட இடத்தில் 
தோண்டி எடுக்கப்படும் உடல் அழுகிய நிலையில் இருப்பதால், உயிரிழந்தது பத்மா தானா என அடையாளம் காணமுடியவில்லை என கேரளாவிலிருந்து தகவல் கிடைத்து வருவதாகவும்  பத்மாவின் உறவினர்கள் தெரிவித்து வந்தனர். டி என் ஏ.பரிசோதனைக்கு பிறகு  இன்று மாலை  பத்மாவின் உடல் அவரது சொந்த ஊரான எர்ரப்பட்டி கிராமத்தில் அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.பின்னர் பத்மாவின் உடலுக்கு இறுதிச்சடங்குகள் செய்யப்பட்டு நல்லடக்கம் செய்யப்பட்டது.