நடுரோட்டில் நிர்வாணமாக நின்ற நடிகை - பிரபல தயாரிப்பாளர் அலுவலகம் முன் பரபரப்பு

 
su

பிரபல தெலுங்கு திரைப்பட தயாரிப்பாளர் கீதா ஆர்ட்ஸ் பன்னி வாசு.  இவர் தன்னை  ஏமாற்றி விட்டதாக சொல்லி துணை நடிகை சுனிதா போயா தயாரிப்பாளர் அலுவலகத்தின் முன்பாக நிர்வாணமாக அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்  .   இந்த விவகாரம் தெலுங்கு மற்றும் தமிழ் திரை உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. 

 தெலுங்கு திரை உலகில் மிகவும் பிரபலமான தயாரிப்பாளர்களில் ஒருவர்  கீதா ஆர்ட்ஸ்  பன்னிவாசு . இவர் யாரிப்பு நிறுவனம் மூலம் பல வெற்றி படங்களை தந்திருக்கிறார்.    பிரபலமான தயாரிப்பாளர்களில் ஒருவரான பன்னி வாசு மீது துணை நடிகை சுனிதா போயா குற்றம் சாட்டி வருவது தெலுங்கு திரை உலகில் பரபரப்பை  ஏற்படுத்தி இருக்கிறது. 

உன்

 என்னை ஏமாற்றிய பன்னி வாசு உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி  ஜூப்ளி ஹில்ஸ் பகுதியில் உள்ள வாசுவின் அலுவலகத்தின் முன்பாக திடீரென்று நிர்வாணமாக அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு இருக்கிறார்.   ஆடைகளை களைந்து நடிகை நடுரோட்டில் நிர்வாணமாக நிற்பதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது.

 தகவல் அறிந்து விரைந்து சென்ற போலீசார் சுனிதா போயாவை உடைகளை உடுத்த சொல்லி பின்னர் ஹைதராபாத்  அழைத்துச் சென்றனர்.   வாசுவிற்கு எதிராக சுனிதா போயா போராட்டம் நடத்துவது இது முதல் முறை அல்ல என்று தெரிய வந்திருக்கிறது.  இதற்கு முன்னர் பலமுறை இப்படி தன்னை ஏமாற்றி விட்டதாக சொல்லி போராட்டம் நடத்தி இருக்கிறார். 

 கடந்த மே மாதம் இதே அலுவலகத்தின்   முன்பாக அரை நிர்வாண போராட்டத்தில் ஈடுபட்டு பரபரப்பு ஏற்படுத்தி இருந்தார் சுனிதா.   இந்த நிலையில் முழு நிர்வான போராட்டத்தை அதிரடியாக ஆரம்பித்து அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி இருக்கிறார்.  ஏற்கனவே போலீசில் புகார் அளித்திருந்தும் எந்த நடவடிக்கையும் இல்லாததால் தான் இப்போது மீண்டும் இப்படி ஒரு போராட்டம் நடத்தி இருக்கிறார் என்று சொல்லி இருக்கிறார்.