போலீசுக்கு உளவு சொன்னவரை ஓடஒட விரட்டிக் கொன்ற மாவோயிஸ்டுகள்

 
murder

தெலங்கானா மாநிலம் முலுகு மாவட்டத்தில் மாவோயிஸ்டுகள் போலீஸ் இன்பார்மர் எனக்கூறி கிராமத்தில் நுழைந்த  மாவோயிஸ்டுகள் ஒருவரை கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

முலுகு மாவட்டம் வெங்கடாபுரம் மண்டலம், கொண்டாபுரம் கிராமத்தைச் சேர்ந்த சபகா கோபால் வீட்டில் இருந்தபோது மர்ம நபர்கள் 5 பேர் வந்தனர். ​​அவர்களைக் கவனித்த கோபால் வெளியில் ஓடிச்சென்ற நிலையில் கோபாலை துரத்தி சென்று  சரமாரியாக கத்தியால் குத்தி வெட்டிக் கொன்றனர்.  கோபால் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடப்பதை உறுதி செய்த பின்னர் லால்சலாம் என கோஷங்களை எழுப்பியவாறு அருகில் உள்ள காட்டுக்குள் ஓடிவிட்டனர்.  இறந்தவருக்கு இரண்டு மனைவிகள் மற்றும் ஐந்து குழந்தைகள் உள்ளனர்.  

போலீஸ் இன்பார்மராக செயல்பட்டதால் கொல்லப்பட்டதாக வெங்கடாபுரம் வாஜேடு பகுதி கமிட்டி பெயரில் மாவோயிஸ்டுகள் கடிதம் வெளியிட்டுள்ளனர். அதில் போலீசாருக்கு தகவல் தருபவர்களாக செயல்படுபவர்கள், தங்கள் செயலை மாற்றிக் கொள்ளாவிட்டால், பொது நீதிமன்றத்தால் தண்டிக்கப்படுவார்கள் என எச்சரிக்கப்பட்டுள்ளது. மறுபுறம், தெலுங்கானாவில் டிஆர்எஸ் கட்சி ஆட்சி அமைந்த பிறகு, என்கவுன்டர் என்ற பெயரில் பலர் சுட்டுக் கொல்லப்பட்டதாக மாவோயிஸ்டுகள் அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளனர். இதனிடையே தெலுங்கானா - சத்தீஸ்கர் எல்லையில் கடந்த 20 நாட்களுக்கு முன்பு மாவோயிஸ்டுகள் நடமாட்டம் இருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் டிஜிபி மகேந்தர் ரெட்டி தலைமையிலான போலீசார் உஷார் படுத்தப்பட்டுள்ளனர்.