ராணுவ ஓய்வூதியதாரர்களுக்கு ஏப்ரல் மாதத்திற்கான ஓய்வூதியம் ஏன் வழங்கப்படவில்லை? மத்திய அரசு விளக்கம்

 
முன்னாள் ராணுவ வீரர்கள்

ஆயிரக்கணக்கான ராணுவ ஓய்வூதியதாரர்களுக்கு  ஏப்ரல் மாதத்திற்கான ஓய்வூதியம் ஏன் வழங்கப்படவில்லை என்பதற்கு மத்திய பாதுகாப்பு துறை அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.

பாதுகாப்பு துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: அனைத்து ராணுவ ஓய்வூதியதாரர்கள் மாதாந்திர ஓய்வூதியத்தை பெறுவதற்கு  வருடாந்திர அடையாளத்தை பூர்த்தி செய்ய வேண்டும். இது பொதுவாக நவம்பர் மாதத்தில் ஓய்வூதியம்  வழங்கும் முகமைகளாக செயல்படும் அனைத்து வங்கிகளாலும் செய்யப்படுகிறது. கோவிட் சூழ்நிலை காரணமாக அரசாங்கம் வருடாந்திர அடையாளத்திற்கான சாளரத்தை 2022 மார்ச் 31ம் தேதி வரை  நீட்டித்தது. 2020 ஏப்ரல் மாதத்துக்கான  ஓய்வூதிய செயலாக்கத்தின் போது, சுமார் 3.3 லட்சம் ஓய்வூதியதாரர்களின் வருடாந்திர அடையாளம் புதுப்பிக்கப்படவில்லை என்பது தெரியவந்தது. 

பணம்

புதுப்பிக்கப்பட்ட அடையாள தரவு ஏதேனும் இருந்தால், அதை பகிந்து கொள்வதற்காக அனைத்து ஓய்வூதியம் வழங்கும் வங்கிகளுடன் ஒரு பட்டியல் பகிரப்பட்டது. இதன் விளைவாக  2.65 லட்சத்திற்கும் அதிகமான  அடையாள நிலை  கடந்த ஏப்ரல் 25ம் தேதிக்குள் ஸ்பார்ஷில் புதுப்பிக்கப்பட்டது. இந்த ஓய்வூதியதாரர்கள் அனைவருக்கும் ஓய்வூதியம் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டது. இருப்பினும் வங்கிகளால்  58,275 ஓய்வூதியதாரர்களின் அடையாளத்தை உறுதிப்படுத்த முடியவில்லை. மேலும் மாதந்திர முடிவடையும் அவர்களின் அடையாளமும் நேரடியாக ஸ்பார்ஷில் பெறப்படவில்லை. எனவே இந்த ஓய்வூதியதாரர்களுக்கு கடந்த ஏப்ரல் 30ம் தேதிக்குள் ஏப்ரல் ஓய்வூதியம் வழங்கப்படவில்லை. 

பாதுகாப்பு துறை அமைச்சகம்

 இந்த 58,275 ஓய்வூதிதாரர்களுக்கு அவர்களின் அடையாளத்தை  இந்த மாதம் 25ம் தேதிக்குள் உறுதி செய்து கொள்ள ஒரு முறை சிறப்பு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு 2022 ஏப்ரல் மாதத்திற்கான ஓய்வூதியம் செயல்படுத்தப்பட்டுள்ளது. மே 4ம் தேதிக்குள் (நேற்று) வரவு வைக்கப்படும். இது  போன்ற அனைத்து  ஓய்வூதியதாரர்களுக்கும் வருடாந்திர அடையாளங்கள் குறித்து எஸ்.எம்.எஸ். மற்றும் மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கப்படுகிறது. அடையாளம் காண, ஓய்வூதியம் பெறுவோர் அருகிலுள்ள சி.எஸ்.சி.ஐ அணுகி ஜீவன் பிரமான் மூலம் ஸ்பார்ஷில் பிபிஒ எண்ணை பயன்படுத்தி பி.டி.ஏ.ஐ SPARSH PCDA ஆக தேர்ந்தெடுத்து  அவர்களின் வருடாந்திர அடையாளத்தை புதுப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.