உச்ச நீதிமன்றத்தின் 50வது தலைமை நீதிபதி -சந்திரசூட் இன்று பதவியேற்கிறார்

 
dy

உச்ச நீதிமன்றத்தின் 50 ஆவது தலைமை நீதிபதியாக டி.ஒய். சந்திரசூட் இன்று பதவி ஏற்கிறார்.  உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி யு.யு. லலித் நேற்று ஓய்வு பெற்ற நிலையில்  அதற்கு அடுத்த நிலையில் இருந்த சந்திரசூட் இன்று பதவி ஏற்கிறார்.  குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு அவருக்கு பதவிப்பிரமாணம் செய்து வைக்கிறார்.

 உச்ச நீதிமன்றத்தின்  தலைமை நீதிபதியாக இரண்டு ஆண்டுகளுக்கு 2024 ஆம் ஆண்டு நவம்பர் 10ஆம் தேதி வரை பொறுப்பு வகிப்பார் டி. ஒய் சந்திர சூட்.  

sh

 தனஞ்சய யஷ்வந்த் சந்திரசூட் 11.11.1959 ல் மும்பையில் பிறந்தார்.   இவரது தந்தை யேஷ்வந்த் விஷ்ணு சந்திரசூட் .  இவர் இந்தியாவின் தலைமை நீதிபதியாக பணியாற்றி உள்ளார். 1978 ஆம் ஆண்டு பிப்ரவரி 22ஆம் தேதி முதல் 1985 ஆம் ஆண்டு ஜூலை 11ஆம் தேதி வரை இந்த பொறுப்பில் இருந்துள்ளார்.  சந்திரசூட்டின்  தாய் பிரபா இசைக்கலைஞர். 

மும்பை கதீட்ரல் ஜான் கோனன் பள்ளி , டெல்லி செயின்ட் கொலம்பா பள்ளி ஆகியவற்றில் படித்த  சந்திரசூட்,  1979 ல் புது டெல்லியில் உள்ள செயின்ட் ஸ்டீபன் கல்லூரியில் பொருளாதாரம் மற்றும் கணிதத்தில் கவுரவ பட்டம் பெற்றார்.  பின்னர் தனது சட்டப்படிப்பை 1982ல் டெல்லி பல்கலைக்கழகத்தில் முடித்தார். பின்னர், 1983 ஆம் ஆண்டில் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றார்.1986ல்  ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் தனது மருத்துவ நீதி பட்டம் பெற்றார். அவரது முனைவர் பட்ட ஆய்வு ஒரு ஒப்பீட்டு கட்டமைப்பில் சட்டத்தை கருத்தில் கொண்டது.

u

சந்திரசூட் 1982ல் டெல்லி பல்கலைக்கழகத்தில் சட்டம் படித்துக்கொண்டே,  நீதிபதிகளுக்கு உதவி செய்யும் இளைய வழக்கறிஞராக  சிறிது காலம் பணியாற்றினார். பின்னர் சல்லிவன் மற்றும் குரோம்வெல் என்ற சட்ட நிறுவனத்தில் பணிபுரிந்தார்.  இந்திய உச்ச நீதிமன்றத்திலும், மும்பை உயர் நீதிமன்றத்திலும் வழக்கறிஞராக பணி செய்தார்.  1998 ல் மும்பை உயர் நீதிமன்றத்தால் மூத்த வழக்கறிஞராக நியமிக்கப்பட்டார் சந்திரசூட்.

1998 ம் ஆண்டு முதல்  நீதிபதியாக நியமிக்கப்படும் வரை இந்தியாவின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரலாக இருந்தார் சந்திரசூட். அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நியமிக்கப்படும் வரை  29.3. 2000 முதல் பம்பாய் உயர் நீதிமன்றத்தில் நீதிபதியானார்.  அதே நேரம் மகாராஷ்டிரா நீதித்துறை அகாடமியின் இயக்குநராகவும் இருந்தார். 31.10. 2013 முதல்  உச்சநீதிமன்றத்தில் நியமனம் வரை அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருந்தார். 13.5. 2016ல்  உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார். இன்று அவர் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவி ஏற்கிறார்.