மத்திய அரசு இந்த சின்ன உதவி செய்தாலும் போதும் நாங்க டாப் 5 மாநிலங்களில் ஒன்றாக வருவோம்.. தேஜஸ்வி யாதவ்

 
தேஜஸ்வி யாதவ்

மத்திய அரசு பீகாருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கினால் இன்னும் வேகமாக முன்னேறி, அடுத்த இரண்டே ஆண்டுகளில் முதல் ஐந்து மாநிலங்களுக்குள் வருவோம் என்று அம்மாநில துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் தெரிவித்தார்.

பீகாரின் துணை முதல்வரும், அம்மாநில நகர்புற மேம்பாட்டு துறை அமைச்சருமான தேஜஸ்வி யாதவ் பேட்டி ஒன்றில் கூறியதாவது: மாநிலத்தில் உள்ள 38 மாவட்டங்களின் தலைமையகம் நகர்புற உள்ளாட்சி அமைப்புகளை கொண்டுள்ளது. இவற்றின் வளர்ச்சிக்காக, 15வது நிதிக் கமிஷன் பரிந்துரைகளின்படி, மிகக் குறைந்த தொகையாக ரூ.7.35 கோடியை மத்திய அரசு வழங்கியுள்ளது. நாங்கள் உத்தர பிரதேசத்துக்கு ஒதுக்கப்பட்ட ரூ.1,988 கோடியில் ஒரு பகுதியை பெறுவோம். ஜார்க்கண்ட் மாநிலத்தை விட எங்கள் பங்கு குறைவு, அம்மாநிலம் ரூ.12 கோடி பெறுகிறது. 

மத்திய அரசு

பீகார் மக்களவைக்கு 40 எம்.பி.க்களை அனுப்புகிறது, மாநிலத்தின் வாக்காளர்களுடன் ஒரு கட்சி மையத்தில் அதிகாரத்தை ஏற்க உதவுகிறது. அதற்கு பதிலாக மாற்றாந்தாய் நடவடிக்கை பெற மட்டுமே உதவுகிறது. உள்கட்டமைப்பு வளர்ச்சியில் நாங்கள் முன்னணி மாநிலமாக இருக்கிறோம். எங்களுக்கு தேவையானது மையத்தின் (மத்திய அரசு) சிறிய உதவி மட்டுமே. சிறப்பு அந்தஸ்து கிடைத்தால், இன்னும் வேகமாக முன்னேறி, அடுத்த இரண்டே ஆண்டுகளில் முதல் ஐந்து மாநிலங்களுக்குள் வருவோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

நிதிஷ் குமார்

2000ம் ஆண்டு முதல் பீகார் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுப்பப்பட்டு வருகிறது. பீகார் மாநிலத்தை  பிரித்தபோது, ஜார்க்கண்ட் மாநிலத்துக்கு கனிம வளங்கள் மற்றும் தொழில்துறையின் சிறந்த நகரங்களும் சென்றது. முதல்வர் நிதிஷ் குமார் ஆட்சிக்கு வந்தது முதல் சிறப்பு அந்தஸ்து கோரிக்கை வலுப்பெற்று வருகிறது.  அவரும் அவ்வப்போது அதை ஒரு தேர்தல் ஒப்பந்தமாக்க முயன்றார்.