லாலு பிரசாத் யாதவை சந்தித்து பேசிய பிரபல பாலிவுட் நடிகர்.. விளக்கம் கொடுத்த தேஜஸ்வி யாதவ்

 
லாலு பிரசாத் - மனோஜ் - தேஜஸ்வி யாதவ்

பிரபல பாலிவுடன் நடிகர் மனோஜ் பாஜ்பாய், லாலு பிரசாத் யாதவை சந்தித்து பேசியது தொடர்பாக தேஜஸ்வி யாதவ் விளக்கம் அளித்துள்ளார்.

பாலிவுட் பிரபலமான நடிகர்கள் மனோஜ் பாஜ்பாய். இவர் தேசிய திரைப்பட விருது உள்பட பல விருதுகளை பெற்றவர். மனோஜ் பாஜ்பாய்  பீகார் மாநிலம் மேற்கு சம்பரன் மாவட்டத்தை சேர்ந்தவர். இவர் கடந்த சில தினங்களுக்கு முன் ராஷ்டிரிய ஜனதா தளத்தின் நிறுவனரும், பீகாரின் முன்னாள் முதல்வருமான லாலு பிரசாத் யாதவை சந்தித்து பேசினார். பாட்னாவில் லாலு பிரசாத் யாதவின் வீட்டில் அவரை மனோஜ் பாஜ்பாய் சந்தித்தார்.

மனோஜ்-தேஜஸ்வி யாதவ்

அந்த சந்திப்பின்போது, பீகாரின் துணை முதல்வரும், லாலு பிரசாத்தின் இளைய மகனுமான தேஜஸ்வி யாதவும் இருந்தார். லாலு பிரசாத் யாதவின் உடல் நலம் குறித்து மனோஜ் பாஜ்பாய் விசாரித்து விட்டு சென்றார். இருப்பினும், மனோஜ் பாஜ்பாய்-லாலு பிரசாத் சந்திப்பு பீகாரில் அரசியலில் பல்வேறு யூகங்களை கிளப்பியது.  இந்நிலையில் இந்த சந்திப்பு தொடர்பாக தேஜஸ்வி யாதவ் விளக்கம் கொடுத்தார்.

மக்களின் உயிர்களை விட உங்க இமேஜ் முக்கியமா?… முதல்வர் நிதிஷ் குமாரிடம் கேள்வி கேட்கும் தேஜஸ்வி யாதவ்

மனோஜ் பாஜ்பாய்-லாலு பிரசாத் சந்திப்பு தொடர்பாக தேஜஸ்வி யாதவ் தனது டிவிட்டர் பக்கத்தில், மனோஜ்-லாலு பிரசாத் சந்திப்பின் போது எடுக்கப்பட்ட சில புகைப்படங்களை ஷேர் செய்து, பீகார் மண்ணின் மைந்தன், இந்திய சினிமாவின் பிரபல மற்றும் தீவிர நடிகர் பத்ம ஸ்ரீ பாஜ்பாய் மனோஜ் அவர்கள் இல்லத்தை அடைந்து தந்தை உடல் நலன்கள் குறித்த தகவல்களை அறிந்து கொண்டார். தனது கடின உழைப்பாலும் திறமையாலும் திரையுலகில் அடையாளமாகி பீகாருக்கு பெருமை சேர்த்துள்ளார் என பதிவு செய்துள்ளார்.