மாணவனை மசாஜ் செய்ய சொன்ன ஆசிரியை - வைரல் வீடியோ

 
te

மாணவனை மிரட்டி தனக்கு மசாஜ் செய்ய சொல்லி கட்டாயப்படுத்திய பள்ளி ஆசிரியையின் வீடியோ வைரலாகி பலரும் கண்டனம் தெரிவித்து வந்த நிலையில் கல்வி அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்துள்ளதால் அந்த  ஆசிரியை பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

 சின்னஞ்சிறு மாணவர் ஒருவரை  வகுப்பில் பாடம் எடுக்காமல் நாற்காலியில் சாவகாசமாக உட்கார்ந்து கொண்டு தண்ணீர் பாட்டிலை எடுத்து தண்ணீர் குடித்துக் கொண்டே,  அந்த மாணவனை தனக்கு மசாஜ் செய்யச் சொல்லி மிரட்டுகிறார் அந்த ஆசிரியை .  மாணவனும் பயந்து போய் அந்த ஆசிரியைக்கு கைகளை பிடித்து மசாஜ் செய்து விடுகிறான்.  

dd

 இதை ஒருவர் மறைந்து நின்று செல்போனில் வீடியோவாக எடுத்து அதை வலைத்தளத்தில் வெளியிட அந்த வீடியோ வைரலாகி பலரையும் பலரையும் அதிர வைத்துள்ளது.   வகுப்பறையில் மாணவர்களுக்கு ஒழுக்கத்தை கற்றுத் தந்து பாடம் கற்றுத் தர வேண்டிய ஆசிரியர் இப்படி மாணவனை மிரட்டி மசாஜ் செய்ய சொன்னது பெரும் குற்றம் என்று கல்வி ஆர்வலர்களும் கண்டனம் தெரிவித்து வந்த நிலையில்,  அந்த ஆசிரியை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பலரும் வலியுறுத்தி வந்த நிலையில், உத்தரபிரதேச மாநிலத்தில் ஹர்தோய் மாவட்டத்தில்தான் அந்த செயல் நடந்திருக்கிறது தெரியவந்தது.

l

 அந்த ஆசிரியையின் பெயர் ஊர்மிளா சிங் என்றும் அவர்  உத்தரப்பிரதேசத்தில் ஹர்தோய் மாவட்டத்தில் உள்ள தொடக்கப் பள்ளியில் ஆசிரியையாக இருந்து வந்ததும் தெரிய வந்திருக்கிறது.   இதை அடுத்து கல்வியாளர்கள் பலரும் வன்மையாக கண்டனம் தெரிவித்து வந்த நிலையில் உத்தரப்பிரதேச ஹர்தோய்  மாவட்ட ஆசிரியர் ஊர்மிளா சிங்கை கல்வி அதிகாரிகள் பணி நீக்கம் செய்துள்ளனர் .  விசாரணை நடத்தி பணி நீக்கம் செய்துள்ளனர்.

மாவட்ட கல்வி அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து ஆசிரியை ஊர்மிளா சிங்கிடம் விசாரணை நடத்தி அவரை பணி நீக்கம் செய்துள்ளனர்.