அமித்ஷாவின் கார் முன்னால் வந்து நின்ற மற்றொரு கார் அடித்து உடைப்பு

 
TRS leader parks car in front of Amit Shah cavalcade in Hyderabad

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சென்ற கான்வாய் மத்தியில் தெலுங்கானா மாநில ஆளும்கட்சி பிரமுகரின் கார் குறுக்கே வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.


ஹைதராபாத்தை  நிஜாம் மன்னரிடமிருந்து சுதந்திர இந்தியாவுடன் இணைக்கப்பட்ட செப்டம்பர் 17ஆம் தேதியை  தேசிய ஒற்றுமை தினமாக பாஜக கொண்டாடி வரும் நிலையில் வைர விழாவாக தெலுங்கானா மாநில அரசு கொண்டாடி வருகிறது. இதனையொட்டி தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் நேற்று ஹைதராபாத்தில் உள்ள துப்பாக்கி பூங்காவில் அமர வீரர்கள் தூணுக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தி தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். 

இதேபோன்று உள்துறை அமைச்சர் அமித்ஷா தேசிய ஒருமைப்பாட்டு தினத்தை ஒட்டி மத்திய அரசு சார்பில் செகந்திராபாத்தில் உள்ள பரேட் மைதானத்தில் மத்திய அரசு சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியில் தேசியக் கொடியை ஏற்றி வைத்து ஹைதராபாத்  இந்தியாவுடன்  இணைக்க காரணமாக இருந்த சர்தார் வல்லபாய் பட்டேல் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்ச்சியை முடித்து கொண்டு அமித்ஷா பரேட் மைதானத்தில்  அமித் ஷா  ஹரிதா பிளாசாவில் நடைபெறும் பாஜக தலைவர்கள் கூட்டத்துக்கு சென்றார். 

அப்போது அமித்ஷா கார் கான்வாய் மைதானத்தில் இருந்து ஹரிதா பிளாசாவுக்கு செல்லும் வழியில்  ஒரு கார் குறுக்கே வந்தது. மேற்கொண்டு அந்த காரை  எடுக்காமல் இருந்ததால் அமித்ஷாவின் பாதுகாப்பு என்.எஸ்.ஜி. படையினர் காரின் பின்பக்க கண்ணாடி உடைத்தனர். பின்னர் அங்கிருந்து காரை அகற்றினர். காரின் உரிமையாளர் டிஆர்எஸ் கட்சியை சேர்ந்த கோசுலா ஸ்ரீனிவாஸ் என்பதும் கார்  என்ஜின் பழுதானதால் தனது கார் திடீரென நின்று விட்டது. தேவையில்லாமல் தனது காரை போலீசார் அடித்து உடைத்துள்ளதாக  கூறினர். இந்த சம்பவம் குறித்து ஹைதராபாத் போலீசார் விசாரித்து வருகின்றனர்.