தெலங்கானாவில் அமைச்சர் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் பங்கேற்காத ஊழியர்களுக்கு நோட்டீஸ்... நகராட்சி ஆணையர் சஸ்பெண்ட்

 
AMU பல்கலையில் ‘மகளையே  பலாத்காரம் செய்தவர் பிரம்மா’ என பாடம் - கொந்தளித்த மாணவர்கள்.. பேராசிரியர் சஸ்பெண்ட்..

தெலங்கானாவில் அமைச்சர் கே.டி. ராம  ராவின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் பங்கேற்காத நகராட்சி ஊழியர்களுக்கு விளக்கம் கேட்டு  நகராட்சி ஆணையர் நோட்டீஸ் அனுப்பியதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதனையடுத்து அவரை தெலங்கானா அரசு சஸ்பெண்ட் செய்தது.


தெலங்கானா மாநிலம் பெல்லம்பள்ளி நகராட்சி ஆணையர் ஜி.கங்காதர், கடந்த 24ம் தேதியன்று பெல்லம்பள்ளி நகரில் நடைபெற்ற அம்மாநில அமைச்சர் கே.டி. ராம ராவின் பிறந்தநாள்  கொண்டாட்டத்தில் கலந்து கொள்ளாததற்காக, நகராட்சி பணியாளர்கள் சிலருக்கு காரணம் கேட்டு நோட்டீஸ் அனுப்பினார். அந்த நோட்டீஸில், மெமோவைப் பெற்ற 24 மணி நேரத்திற்குகள் இந்த மெமோவிற்கு நீங்கள் பதிலளிக்கலாம், இல்லையெனில் உங்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமித் மால்வியா

மேலும் இந்த விவகாரம் தொடர்பாக தெலங்கானா அரசை பா.ஜ.க. கண்டித்தது. பா.ஜ.க.வின் ஐ.டி. பிரிவு தலைவர் அமித் மால்வியா இந்த விவகாரம் தொடர்பாக  டிவிட்டரில், ஜூலை 24ம் தேதியன்று இளவரசர் கே.டி.ஆரின் பிறந்தநாள் விழாவில் ஏன் பங்கேற்கவில்லை என்பதை விளக்குமாறு  ஊழியர்களுக்கு தெலங்கான அரசு மெமோ அனுப்பியுள்ளது. கடைசியாக எங்களுக்கு தெரிந்தது. தெலங்கானாவில் இன்னும் மக்களுகு்கு சேவை செய்வதற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அரசாங்கம் இருக்கிறதா அல்லது அது முடியாட்சியாக, கே.சி.ஆர். குடும்பத்தின் நிலப்பிரபுத்துவமாக மாறியிருக்கிறதா? என பதிவு செய்து இருந்தார்.

கே.டி.ராம ராவ்

நகராட்சி ஆணையர் அனுப்பிய நோட்டீஸூக்கு பெரும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, பெல்லம்பள்ளி நகராட்சி ஆணையர் ஜி.கங்காதரை தெலங்கானா அரசு சஸ்பெண்ட் செய்தது. இது தொடர்பாக தெலங்கானா அமைச்சர் கே.டி. ராம ராவ் டிவிட்டரில், அரசியலோ, நிர்வாகத்திலோ முகக்துதியை ஊக்குவித்த கடைசி நபர் நான். எனது பிறந்தநாள் கொண்டாட்டங்களுக்கு கலந்து கொள்ளாததற்காக, தனக்கு கீழ்பணிபுரியும் அதிகாரிகளுக்கு அதிக ஆர்வமுள்ள நகராட்சி ஆணையர் மெமோ வழங்கியதை படித்தேன். அவரது அபத்தமான நடத்தைக்காக நகராட்சி ஆணையரை இடைநீக்கம் செய்யும்படி சி.டி.எம்.ஏ. தெலங்கானாவை கேட்டேன் என பதிவு செய்து இருந்தார்.