பேஸ்புக்கில் அறிமுகமான பெண், கணவனை விட்டு தன்னுடன் வர மறுத்ததால் கழுத்தை அறுத்த எம்எல்ஏ உதவியாளர்

 
murder

தெலுங்கானா மாநிலத்தில்  சமூக வலைத்தளத்தின் மூலம் பழகிய பெண்ணை பீர் பாட்டிலால் கழுத்து அறுத்து கையை உடைத்த எம்எல்ஏவின் உதவியாளரின் செயல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

தெலங்கானா மாநிலம்  ஜூப்ளி ஹில்ஸ் தொகுதி எம்எல்ஏ மாகந்தி கோபிநாத் உதவியாளர் விஜய், பெண்ணின் கழுத்தை அறுத்து கொலை முயற்சி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. விஜய் பேஸ்புக் மூலம் நிஷா என்ற பெண்ணுடன் அறிமுகம் செய்து கொண்டார். இவர்கள் இருவரும் சில காலமாக நண்பர்களாக இருந்துள்ளனர். ஆனால் சில நாட்களாக விஜய் தன்னுடன் தனியாக நேரத்தை செலவிடுமாறும் தனது ஆசையை நிறைவேற்ற வேண்டும் என நிஷாவை வற்புறுத்தி வந்துள்ளார். இதனால் நிஷா விஜய் செல்போனை எண்னை பிளாக் செய்தார்.  இதனால் கோபமடைந்த விஜய் நேற்று இரவு நிஷாவின் வீட்டிற்கு சென்றார். 

அப்போது நிஷாவின் கணவர் வீட்டில் இல்லாததால், தனது ஆசையை நிறைவேற்றும்படியும் கணவரை பிரிந்து வரும்படி  தொல்லை கொடுத்துள்ளார். இதனை நிஷா ஏற்காமல் எதிர்க்கவே தான் கொண்டு வந்திருந்த பீர் பாட்டிலை உடைத்து அதன் கண்ணாடியை நிஷாவின் தொண்டையில் குத்தினார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு வந்து பார்த்தபோது விஜய் ஏற்கனவே அங்கிருந்து சென்றுவிட்டார். அக்கம் பக்கத்தினர் நிஷாவை மீட்டு சிகிச்சைக்காக யசோதா மருத்துவமனையில் சேர்த்தனர். 

எம்.எல்.ஏ.வின் உதவியாளர்  என்பதால் போலீசார் இந்த வழக்கை தவறாக சித்தரிப்பதாக பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் குற்றம் சாட்டுகின்றனர். இந்நிலையில் நிஷாவின் கணவர் எம்எல்ஏவின் உதவியாளர் விஜய் மூலமாக தனக்கும் தனது குடும்பத்தாருக்கும் உயிருக்கு ஆபத்து இருப்பதாக செல்பி வீடியோ வெளியிட்டுள்ளார்.