இன்றைய கால கட்டத்தில் மம்தா பானர்ஜிதான் மிகப்பெரிய கம்யூனிஸ்ட் தலைவர்... திரிணாமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏ. புகழாரம்

 
நாட்டில் சூப்பர் எமர்ஜென்சி நிலவுகிறது – மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி காட்டம்

இன்றைய கால கட்டத்தில் மம்தா பானர்ஜிதான் மிகப்பெரிய கம்யூனிஸ்ட் தலைவர் என்று திரிணாமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏ.  மனோரஞ்சன் பயபாரி புகழ்ந்து பேசினார்.

மேற்கு வங்க மாநிலம் பாலகர் சட்டப்பேரவை தொகுதியின் திரிணாமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏ.வும், பிரபலமான தலித் தலைவர்களில் ஒருவருமான மனோரஞ்சன் பயபாரி தனியார் நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில் கூறியதாவது: கம்யூனிஸ்டாக இருக்க, நீங்கள் சில வேலைகளை செய்ய வேண்டும். ஜோதிபாசுவும் (மேற்க வங்க முன்னாள் முதல்வர்) அவரை போன்ற கம்யூனிஸ்டுகள் என்று சொல்லிக் கொண்டவர்களும் உண்மையில் முதலாளிகளுக்கு ஆதரவாகவே செயல்பட்டனர். 

மனோரஞ்சன் பயபாரி

அதேசமயம் நீங்கள் பார்த்தால் இன்றைய கால கட்டத்தில் மம்தா பானர்ஜிதான் மிகப்பெரிய கம்யூனிஸ்ட் தலைவர். மா கேண்டீன் திட்டத்தை கம்யூனிஸ்ட் அரசால் கொண்டு வரப்பட்டு இருந்தால், எனக்கு நானே உணவளிக்க நான் நாயின் வாயிலிருந்து உணவை பறிக்க  வேண்டியதில்லை. அந்த கட்சியில் மம்தா பானர்ஜி போன்ற ஒரு தலைவர் இருந்தால் போதும். பா.ஜ.க.வுடன் எனக்கு எந்த பிரச்சினையும் இல்லை. 

பா.ஜ.க.-ஆர்.எஸ்.எஸ்.

நான் மனுவாட் மற்றும் பிரமாணவாத்திற்கு மட்டுமே எதிரானவன். ஆர்.எஸ்.எஸ். மனுவாட்டை பிரச்சாரம் செய்கிறது. அதன் அரசியல் பிரதிநிதியான பா.ஜ.க. மேலும் மேம்படுத்துகிறது. நான் சுயமாக படித்த நிலையிலும் இன்று இங்கு இருக்கிறேன். பள்ளியில் படிக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்திருந்தால், நான் எங்கே இருந்திருப்பேன் என்பது உங்களுக்கு தெரியும். இவ்வாறு அவர் தெரிவித்தார். 1970களில் நக்சல் இயக்கத்தில் தன்னை இணைத்து கொண்டவர் மனோரஞ்சன் பயபாரி. சிறையில் இருந்த காலத்தில் படிக்க கற்றுக் கொண்டதாக  மனோரஞ்சன் பயபாரி தெரிவித்துள்ளார்.