வங்கதேசத்தில் இருந்து புலம்பெயர்ந்தவர்களை வாக்காளர் பட்டியலில் சேர்த்தால் நமக்கு நஷ்டம்.. திரிணாமுல் காங்கிஸ் எம்.எல்.ஏ.

 
கோகன் தாஸ்

வங்கதேசத்தில் இருந்து புலம்பெயர்ந்தவர்களை வாக்காளர் பட்டியலில் சேர்த்தால், அவர்கள் இந்து என்ற உணர்வில் பா.ஜ.க.வுக்கு வாக்களிப்பார்கள் அது நமக்கு நஷ்டம் எனவே அவர்கள் பெயர் வாக்காளர் பட்டியலில் இடம் பெறக்கூடாது என்று திரிணாமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏ. பேசியிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

மேற்கு வங்கம் பர்தமான் தக்ஷின் சட்டப்பேரவை தொகுதி எம்.எல்.ஏ.வாக இருப்பவர் திரிணாமுல் காங்கிரஸின் கோகன் தாஸ். திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட திரிணாமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏ. கோகன் தாஸ், தொண்டர்கள் மத்தியில் பேசுகையில்  கூறியதாவது: பல புதிய நபர்கள் மாநிலத்துக்கு வருகிறார்கள். அவர்கள் வங்கதேசத்தை சேர்ந்தவர்கள். 

திரிணாமுல் காங்கிரஸ்
இவர்களில் பலர் இந்துத்துவ உணர்வுகளால் பா.ஜ.க.வுக்கு வாக்களிப்பார்கள். மக்கள் தினமும் ஊடுருவி வருகின்றனர். அவர்கள் வங்கதேசத்தில் இருந்து வருகிறார்கள் என்பதை நீங்கள் எளிதாக புரிந்து கொள்ளலாம். அவர்களின் பெயர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்க முயற்சித்தால், அவர்கள் இந்து-இந்து என்று செய்து, பெரும்பாலும் பா.ஜ.க.வுக்கு வாக்களிப்பதால் அது நமக்கு நஷ்டம்தான். இதை நாம் முன்பே பார்த்திருப்பதால் இதை மறுக்க முடியாது. 

பா.ஜ.க.

எனவே வாக்காளர் பட்டியலில் யார் பெயர் சேர்க்கப் போகிறார்களோ, அந்த நபர் ஊடுருவும் நபராக இருந்தாலும் நமது கட்சியுடன் தொடர்பில்  இருப்பவர்களை மட்டுமே சேர்க்க வேண்டும். வங்கதேசத்தில் இருந்து சட்டவிரோதமாக குடியேறியவர்கள் தினமும் நமது மாநில பகுதிக்குள் நுழைந்து வருகின்றனர். இவ்வாறு அவர் தெரிவித்தார். திரிணாமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏ. கோகன் தாஸின் இந்த பேச்சு மம்தா பானர்ஜிக்கு சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது.