முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் சைக்கோ ஆட்சியால் அனைத்து தரப்பு மக்களும் பாதிக்கப்படுகின்றனர்... சந்திரபாபு நாயுடு தாக்கு

 
போற போக்கை பார்த்தா கட்சியில நீங்களாவது இருப்பீங்களா? தனி மரமான சந்திரபாபு நாயுடு

ஆந்திர பிரதேச முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் சைக்கோ ஆட்சியால் அனைத்து தரப்பு மக்களும் பாதிக்கப்படுகின்றனர் என்று தெலுங்கு தேக கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு குற்றம் சாட்டினார்.

ஆந்திர பிரதேசத்தில் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் அரசாங்கம், சாலைகளில் பொதுக்கூட்டங்களை நடத்தக் கூடாது என்று உத்தரவிட்டுள்ளது. ஆந்திர பிரதேசத்தின் இந்த உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், தெலுங்கு தேச கட்சியின் தலைவரும், அம்மாநில முன்னாள் முதல்வருமான சந்திரபாபு நாயுடு நேற்று சித்தூர் மாவட்டம் நாராயவாரிபள்ளேயில், அரசு உத்தரவின் நகலை  எரித்தார். அதன் பிறகு பொதுக்கூட்டத்தில் சந்திரபாபு நாயுடு  பேசுகையில் கூறியதாவது: 

அரசின் உத்தரவு நகலை எதிர்த்த சந்திரபாபு நாயுடு மற்றும் தெலுங்கு தேசம் கட்சியினர்

சங்கராந்தி தெலுங்கு மக்களுக்கு ஒரு முக்கிய பண்டிகை. தெலுங்கர்களின் வாழ்வை தெலுங்கு தேசம் கட்சி தோன்றுவதற்கு முன்னும், பின்னும் பார்க்க வேண்டும். தெலுங்கு மாநிலத்தை சாதித்தவர் மறைந்த பொட்டி ஸ்ரீராமுலுதான் என்றாலும்,  தெலுங்கர்களுக்கு மரியாதை கொடுத்தவர் மறைந்த என்.டி.ராமராவ். இந்த சைக்கோ ஆட்சியால் அனைத்து தரப்பு மக்களும் பாதிக்கப்படுகின்றனர். பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் எதிர்காலத்திற்காக மன வேதனையை அனுபவித்து வருகின்றனர். 

ஜெகன் மோகன் ரெட்டி

முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான அரசு வேறுவிதமாக சிந்திக்கிறது. என் பொய் வழக்குகள் போடப்படுகின்றன. எனது கூட்டங்களுக்கு கூட அரசு பாதுகாப்பு வழங்கவில்லை. முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டிக்கு காவல்துறையின் ஆதரவு இருந்தால், மாநிலத்தின் ஐந்த கோடி மக்களின் ஆதரவு எனக்கு உண்டு. எனது போராட்டம் எனது தனிப்பட்ட ஆதாயங்களுக்காக அல்ல, ஆந்திர மக்களின் நலனுக்காக மட்டுமே. இவ்வாறு அவர் தெரிவித்தார்.