அசம் கானுக்கு பின்னடைவு.. வழக்குகளை வேறு மாநிலத்துக்கு மாற்றக்கோரிய மனுவை நிராகரித்த உச்ச நீதிமன்றம்

 
அசம் கான்

தன் மீதான வழக்குகளை உத்தர பிரதேசத்திலிருந்து வேறு மாநிலத்துக்கு மாற்றக்கோரிய அசம் கானின் மனுவை உச்ச நீதிமன்றம் நிராகரித்தது.

சமாஜ்வாடி கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவர் அசம் கான். கடந்த ஆண்டு  அக்டோபரில் சிறப்பு நீதிமன்றம், உத்தர பிரதேசத்தில் இரு சமூகத்தினர் இடையே வெறுப்புணர்வை தூண்டும் விதமாக பேசிய வழக்கில், சமாஜ்வாடி கட்சி எம்.எல்.ஏ. அசம் கானுக்கு  3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டது. மூன்று ஆண்டுகள் தண்டனை பெற்ற எம்.பி. அல்லது எம்.எல்.ஏ.க்கள் தகுதி செய்யப்படுவர். இதன்படி எம்.எல்.ஏ. பதவியிலிருந்து அசம் கான் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். 

சமாஜ்வாடி

முன்னாள் எம்.எல்.ஏ. அசம் கான் தற்போது வெறுப்பு பேச்சு, ஊழல் மற்றும் திருட்டு வழக்கு உள்பட கிட்டத்தட்ட 90 வழக்குகளை எதிர்கொள்கிறார். அண்மையில் தன் மீதான சில வழக்குகளை உத்தர பிரதேசத்தில் இருந்து  வேறு மாநிலத்துக்கு மாற்றக்கோரி உச்ச நீதிமன்றத்தில் அசம் கான் மனு தாக்கல் செய்தார். இந்நிலையில் நேற்று உச்ச நீதிமன்றம் அசம் கானின் மனுவை நிராகரித்தது.

உச்ச நீதி மன்றம்

அதேசமயம் அசம் கான் சம்பந்தப்பட்ட உயர் நீதிமன்றத்தை அணுகுமாறும், அவரது மனுவை விரைவாக விசாரணைக்கு எடுத்துக் கொள்ளலாம் என்றும் உத்தரவிட்டது. தன் மீதான வழக்குகளை வேறு மாநிலத்துக்கு மாற்றக்கோரிய மனுவை உச்ச நீதிமன்றம் நிராகரித்தது அசாம் கானுக்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது. இருப்பினும், விரைவில் சம்பந்தப்பட்ட உயர் நீதிமன்றத்தில், தன் மீதான வழக்குகளை வேறு மாநிலத்துக்கு மாற்றக்கோரிய மனு தாக்கல் செய்வார் என கூறப்படுகிறது.