ஆசிரியர் தகுதித் தேர்வு ஹால் டிக்கெட்டில் நடிகை சன்னி லியோன் புகைப்படம்

 
sunny

கர்நாடக மாநிலத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வு நுழைவு அட்டையில் கவர்ச்சி நடிகை சன்னி லியோன் புகைப்படம் இடம் பெற்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

Sunny Leone

கர்நாடக மாநிலத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வில் பங்கேற்க ஆன்லைன் மூலம் ஆயிரக்கணக்கானோர் விண்ணப்பித்துள்ளனர். அவ்வாறு விண்ணப்பித்த மாணவர்களுக்கு தேர்வு எழுத நுழைவு அட்டை வழங்கப்பட்டு வந்த நிலையில் ஒருவரது நுழைவு அட்டையில் கவர்ச்சி நடிகை சன்னி லியோன் புகைப்படம் இடம் பெற்றதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த படம் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் இதுகுறித்து தேர்வு ஆணையம் குறிப்பிட்ட மாணவியிடம் தொடர்பு கொண்டு விசாரணை நடத்திய போது மாணவி தனது கணவரின் நண்பர் ஒருவர் மூலமாக ஆன்லைனில் விண்ணப்பம் செய்ததாகவும் அவர் தவறான புகைபடத்தை பதிவு செய்திருக்கலாம் என்றும் தெரிவித்துள்ளார். 

மாணவர்கள் ஆன்லைன் மூலமாக எந்த புகைப்படம் பதிவு செய்தாலும் அதை ஆய்வு செய்யாமல் அவ்வாறே வெளியிடும் மோசமான நிலையில் கல்வித்துறை யின் உட்கட்டமைப்பு இருப்பதாக காங்கிரஸ் கேள்வி எழுப்பியுள்ள நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்த அரசு தரப்பில் உத்திரவிட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.