கெஜ்ரிவால் ஜி தேர்தலில் வெற்றி பெறுவதை பற்றி பகல் கனவு காண வேண்டாம்...சுகேஷ் சந்திரசேகரின் புதிய கடிதத்தால் பரபரப்பு

 
அரவிந்த் கெஜ்ரிவால்

அரவிந்த் கெஜ்ரிவால் ஜேி தேர்தலில் வெற்றி பெறுவதை பற்றி பகல் கனவு காண வேண்டாம் என்று சுகேஷ் சந்திரசேகர் தான் எழுதியுள்ள புதிய கடிதத்தில் தெரிவித்துள்ளார்.


பணமோசடி வழக்கில் டெல்லி திஹார் சிறையில் உள்ள சுகேஷ் சந்திரசேகர் அண்மையில் டெல்லி துணைநிலை கவர்னருக்கு எழுதிய கடிதம் டெல்லி அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், சில தினங்களுக்கு முன் சுகேஷ் சந்திரசேகர் எழுதிய புதிய கடிதத்தில், ஆம் ஆத்மி கட்சிக்கு ரூ.500  கோடி வசூலிக்குமாறு அரவிந்த் கெஜ்ரிவால் கேட்டதாகவும், சத்யேந்தர் ஜெயின் தன்னை மிரட்டியதாகவும் குறிப்பிட்டு இருந்தார். இது டெல்லி அரசியல் வட்டாரத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில், சுகேஷ் சந்திரசேகர் தனது வக்கீல் வாயிலாக புதிய கடிதம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த கடிதத்தில் சுகேஷ் சந்திரசேகர்  எழுதியிருப்பதாவது: டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் ஜி, டெல்லி துணைநிலை கவர்னரிடம் உங்களை பற்றியும், உங்கள் கூட்டாளிகள் குறித்து எழுப்பிய பிரச்சினைகளில் நான் கூறியது தவறாக இருந்தால், நான் தூக்கில் தொங்க தயாராக உள்ளேன். ஆனால் புகார் உண்மை என நிரூபிக்கப்பட்டால், நீங்கள் பதவியை ராஜினாமா செய்து விட்ட அரசியலில் இருந்து ஓய்வு பெறுவீர்கள். 

சுகேஷ் சந்திரசேகர்

நான் அமைதியாக இருந்தேன், எல்லாவற்றையும் புறக்கணித்தேன். ஆனால் சிறை நிர்வாகம் மற்றும் ஜெயின் மூலம் உங்கள் தொடர்ச்சியான அச்சுறுத்தல்கள் மற்றும் அழுத்தம் காரணமாக, நான் விசாரணையில் இருந்தபோதிலும் வெட்கமின்றி, பஞ்சாப்  மற்றும் கோவா தேர்தல்களின் போது நிதி வழங்குமாறு கேட்டனர். நான் பொய் சொல்கிறேன் என்றால் சிறை நிர்வாகம் ஏன் எனக்கு அழுத்தம் கொடுக்கிறது அல்லது எனது முந்தைய புகாரை வாபஸ் பெற வற்புறுத்தியது ஏன்? கெஜ்ரிவால் ஜி, முன்னாள் டி.ஜி. சந்தீப் கோயல் மற்றும் சிறை நிர்வாகம் மீது உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட புகாரை வாபஸ் பெறுமாறு ஜெயின் ஏன் என்னை தொடர்ந்து கேட்டுக் கொண்டார்?. உங்கள் தேர்தல் பிரச்சாரங்களுக்கு அதிக நிதி தருமாறு என்னை தொடர்ந்து மிரட்டியது ஏன்? விசாரணைக்கு ஏன் பயம்? என்ன? நீங்கள் உண்மையாக இருந்தால் என்ன பயம்? 

சத்யேந்தர்  ஜெயின்

கெஜ்ரிவால் ஜி, தேர்தல் காரணமாக இதெல்லாம் நடக்கிறது என்று சொல்லிக் கொண்டிருக்க வேண்டாம். நான் உங்களுக்கு ஒன்றை சொல்லிவிட்டு ஒரு ஆலோசனை கூறுகிறேன். என்னை உங்களுக்கு நன்றாக தெரியும், நீங்களும் ஜெயினும் என்னை நன்கு அறிந்த ஒரு சிலரில் உள்ளீர்கள். எனவே நான் சொன்னதற்கு எதிராக ஆதாரம் கொடுக்க மாட்டேன் என்று மாயையாக நினைக்காதீர்கள். உங்கள் முகமூடியை திறந்த வெளியில் கழற்றி வேண்டியிருப்பதால், என்னிடம் இருக்கும் ஒவ்வொரு பொருளையும் தருகிறேன். தயவு செய்து கெஜ்ரிவால் ஜி தேர்தலில் வெற்றி பெறுவதை பற்றி பகல் கனவு காண வேண்டாம். மக்கள் அனைத்தையும் பார்க்கிறார்கள். உங்கள் நாடகம் இனி வேலை செய்யாது. உங்கள் கர்மா, உங்கள் பொய்கள், நீங்கள் நிச்சயமாக மோசமாக தோற்கடிக்கப்படுவீர்கள். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.