கர்நாடகாவில் ஆட்டோவில் திடீரென வெடிவிபத்து- பரபரப்பு

 
auto

கர்நாடக மாநிலம் மங்களூரு நகரில் ஆட்டோவில் திடீரென வெடி விபத்து ஏற்பட்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.


கர்நாடக மாநிலம் மங்களூரு நகரில் கனகன்டி காவல்நிலையம் சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் மாலை ஐந்து 15 மணியளவில் சாலையில் சென்று கொண்டிருந்த ஆட்டோ திடீரென வெடித்து அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்தது. ஆட்டோவில் பயணித்த பயணி கொண்டு வந்த சாக்கு முட்டையிலிருந்து பொருள் வெடித்ததாக கூறப்படுகிறது. 

இந்த விபத்தில் ஆட்டோவில் வந்த பயணியும் ஆட்டோ ஓட்டுநரும் படுகாயம் அடைந்துள்ளனர். இருவருக்கும் மங்களூரு நகரில் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. வெடி விபத்து ஏற்பட்ட ஆட்டோவில் இருந்து குக்கர் ஒன்று சேதமடைந்த நிலையில் நீக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சம்பவ இடத்தில் காவல்துறை உயர் அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர் நிபுணர்கள் சோதனை செய்த பிறகு தான் இந்த வெடி விபத்து குறித்து முழுமையான தகவல் கிடைக்கும் என மங்களூரு காவல்துறை ஆணையர் சசிகுமார் தெரிவித்துள்ளார்.