காந்திகளின் மதப் பழக்கவழக்கங்களைப் நான் வெளிப்படுத்தத் தொடங்கினால் குழப்பமாகி விடும்.. சுப்பிரமணியன் சுவாமி

 
சுப்பிரமணியன் சுவாமி

ராகுல் காந்தியை ராமருடன் ஒப்பிட்டதற்கு, காந்திகளின் மதப் பழக்கவழக்கங்களைப் பற்றிய விவரங்களை நான் வெளிப்படுத்தத் தொடங்கினால், அது மிகவும் குழப்பமாகி விடும் என்று பா.ஜ.க.வின் மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்தார்.

டெல்லியில் நிலவும் கடும்  குளிரிலும் ராகுல் காந்தி கடந்த திங்கள் கிழமையன்று காலையில் அரைக் கை  டி-சர்ட் அணிந்து முன்னாள் பிரதமர்கள் இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி, வாஜ்பாய் உள்ளிட்ட தலைவர்களின் நினைவிடத்துக்கு சென்று மலர் தூவி மரியாதை செய்தார். கடும் குளிரிலும் அரைக் கை டி சர்ட் அணிந்து ராகுல் காந்தி நினைவிடங்களுக்கு சென்றதை காங்கிரஸ் தலைவர்கள் பெருமையாக பேசினர். குறிப்பாக ராகுல் காந்தியை யோகி மற்றும் பகவான் ராமருடன் ஒப்பிட்டு காங்கிரஸ் தலைவர்கள் பேசினர். 

வாஜ்பாய் நினைவிடத்தில் மரியாதை செலுத்திய ராகுல் காந்தி

ராகுல் காந்தியை பகவான் ராமருடன் காங்கிரஸ் தலைவர்கள் ஒப்பிட்டு பேசியதை பா.ஜ.க. மூத்த தலைவரான சுப்பிரமணியன் சுவாமி விமர்சனம் செய்துள்ளார். இது தொடர்பாக சுப்பிரமணியன் சுவாமி கூறியதாவது: லண்டனில் உள்ள  போஹேமியன் வாழ்க்கையை (வழக்கத்திற்கு மாறான வாழ்க்கை முறை நடைமுறை) வாழும் ஒரு நபரை ராமருடன் ஒப்பிட முடியாது. பகவான் ராமர் ஒரு சிறந்த சுய ஒழுக்கம் கொண்டவர் மற்றும் சாதாரண மக்கள் அவரை அடையாளம் காணும் வகையில் அவர் செயல்பட்டார். இது மிகவும் சக்திவாய்ந்த வாக்கு வங்கியாக மாறிவரும் இந்துத்துவா வாக்கு வங்கியை உடைக்க முயற்சிக்கும் தீவிர முயற்சியாகும், இதில் பங்கேற்காதவரை வெற்றி பெற முடியாது என்று காங்கிரஸ் பயப்படுகிறது. 

பிரியங்கா, ராகுல்,சோனியா

எந்த மனிதனும் கடவுளின் நிழலாக இருக்க முடியாது. அவர்கள் ஒரு சிறிய தேவாலயத்திற்கு செல்கிறார்கள் மற்றும் கிறிஸ்துவ பிராத்தனைகளில் பங்கேற்பார்கள் என்பது எனக்கு தெரியும். காந்திகளின் (சோனியா குடும்பம்) மதப் பழக்கவழக்கங்களைப் பற்றிய விவரங்களை நான் வெளிப்படுத்தத் தொடங்கினால், அது மிகவும் குழப்பமாகி விடும். ராமர் கோயில் கட்டப்பட்டபோது, ராமர் இருப்பதற்கான ஆதாரம் இல்லை என்று கூறி எதிர்க்கட்சிகளுக்கு காங்கிரஸ் கட்சி வழங்கியது. அவர்கள் அவநம்பிக்கையாளர்கள், வேறு எதுவும் இல்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.