ஆசிரியர்களை மரத்தில் கட்டி வைத்து அடித்த மாணவர்கள்

 
te

ஆசிரியர்களை மரத்தில் கட்டி வைத்து அடித்த மாணவர்கள்.  குறைந்த மதிப்பெண்கள் போட்டு விட்டார்கள் என்று அந்த ஆசிரியர்கள் மரத்தில் கட்டி வைத்து அடித்து தங்கள் ஆத்திரத்தை தீர்த்துக் கொண்டிருக்கிறார்கள் மாணவர்கள் . ஜார்கண்ட் மாநிலத்தில் நடந்திருக்கிறது இந்த பயங்கரம் .

அம் மாநிலத்தில் தும்கா மாவட்டம் கோபி கந்தர் கிராமம் .   இங்கு பழங்குடியின  மாணவர்களுக்கான அரசு உண்டு உறைவிட பள்ளி இயங்கி வருகிறது.  இந்தப் பள்ளியில் 200 பேருக்கும் மேற்பட்ட மாணவர்கள் தங்கி படித்து வருகிறார்கள்.   அண்மையில் ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறை தேர்வு முடிவுகள் வெளியானது.   அந்த தேர்வு முடிவுகளில் 11 மாணவர்களுக்கு 32 மதிப்பெண்கள் மட்டுமே வழங்கப்பட்டிருந்தது . 

t

அந்த பதினோரு பேரும் தேர்ச்சி அடையவில்லை என்று சொல்லப்பட்டிருந்தது.   இதனால் ஆத்திரமடைந்த அந்த மாணவர்கள் பள்ளியின் கணித ஆசிரியர் சுமன் குமார் பள்ளி அலுவலர் சோனி ராம் சவுரி ஆகியோரை  பள்ளி வளாகத்தில் இருந்த மரத்தில் கட்டி வைத்து சரமாரியாக அடித்துள்ளார்கள்.

 அந்த மாணவர்களுடன் சேர்ந்து பாதிக்கப்படாத மற்ற மாணவர்களும் சேர்ந்து ஆசிரியர் மீது தாக்குதல் நடத்திய உள்ளனர்.   சம்பவம் குறித்து அறிந்த போலீசார் பள்ளி வளாகத்திற்குள் சென்று விசாரணை மேற்கொண்டு  உள்ளார்கள்.   விசாரணையில் ஆசிரியரை கட்டி வைத்து மாணவர்கள் அடித்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. 

மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படும் என்பதால் அவர்களின் நலன் கருதி புகார் கொடுக்க விரும்பவில்லை என்று ஆசிரியர் சுமன் குமார் கூறியிருக்கிறார்.  சுமன் குமார்தான் அந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியர்.   இந்த சம்பவத்தை அடுத்து அந்தப் பள்ளியில் ஒன்பது,  பத்தாம் வகுப்புகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு இரண்டு நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டு வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

 செய்முறை தேர்வுக்கான மதிப்பெண்கள் இதுவரை வெளியிடப்படவில்லை.  வதந்தியை நம்பி தான் மாணவர்கள் இது போன்ற செயல்களில் ஈடுபட்டதாக விசாரணையில் தெரிய வந்திருக்கிறது.