திரைப்பட கல்லூரி விடுதியில் மாணவர் தூக்கிட்டு தற்கொலை

 
m

புனே திரைப்படக் கல்லூரி விடுதியில் மாணவர் அஸ்வின் அனுராக் சுக்லா தூக்கில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.  அதனால் அவர் தற்கொலை செய்துகொண்டிருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.  தற்கொலைக்காக கடிதம் எதுவும் சிக்கவில்லை என்பதால் போலீசார் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

 மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் உள்ள இந்திய திரைப்படம் மற்றும் டிவி கல்லூரியில் கோவாவை சேர்ந்த அஸ்வின் அனுராக் சுக்லா(வயது32) ஒளிப்பதிவு இறுதி ஆண்டு படித்து வந்திருக்கிறார்.  இவர் கல்லூரி விடுதியிலேயே தங்கியிருந்து படித்து வந்திருக்கிறார்.   கடந்த சில தினங்களாகவே அஸ்வின் அறை மூடியே இருந்திருக்கிறது.   சக மாணவர்கள் அவ்வப்போது தட்டிப் பார்த்தும் கதவு திறக்கவில்லை.

t

இந்நிலையில்  இன்று காலையில் இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.  அதன் பின்னர் போலீசார் வந்து மாற்றுச் சாவி மூலம் கதவை திறந்து உள்ளே சென்று இருக்கிறார்கள்.   அப்போது அறையில் அஸ்வின் அனுராக் சுக்லா தூக்கில் தொங்கிய நிலையில் இருந்திருக்கிறார்.  

 இறந்து சில தினங்கள் ஆகிவிட்டதால் உடல் அழுகிய நிலையில் இருந்திருக்கிறது.   அந்த உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர் போலீசார். அதன் பின்னர்  மாணவரின் மரணம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் .

 மாணவர் அறையில் தூக்கி நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.   அவரது உடல் அழுகிய நிலையில் இருந்தது.  அதனால் அவர் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்ற சந்தேகம் இருக்கிறது .  ஆனால் இதுவரைக்கும் தற்கொலைக்கான கடிதம் எதுவும் கைப்பற்றப்படவில்லை  என்கிறது காவல்துறை.  ஆனால் சம்பவம் குறித்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகிறோம் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.  

 விடுதியில் மாணவர் தூக்கில் சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் புனே திரைப்பட கல்லூரி மாணவர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.