கல்லூரி விடுதியில் மாணவி தூக்கிட்டு தற்கொலை

 
y

தனியார் கல்லூரி மாணவி கல்லூரி விடுதியிலேயே தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கிறார் இந்த சம்பவம் பெங்களூரில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கிறது.  

 கர்நாடக மாநிலத்தில் பெங்களூரு கெங்கேரி பகுதியில் இயங்கி வரும் தனியார் கல்லூரியில் ஷிவானி என்கிற 21 வயது மாணவி படித்து வந்திருக்கிறார்.  அவர் கல்லூரிக்கு சொந்தமான விடுதியிலேயே தங்கி படித்து வந்திருக்கிறார்.  

gg

 இந்த நிலையில் நேற்று காலையில் கல்லூரியில் தேர்வு நடைபெற இருந்திருக்கிறது.   இந்த தேர்வை எழுத சிவானி கல்லூரிக்கு வரவில்லை.  இது குறித்து சக மாணவிகள் விடுதி  வார்டனுக்கு தகவல் தெரிவித்திருக்கிறார்கள்.   உடனே விடுதி வார்டன் ஷிவானி தங்கி இருந்த அறைக்கு சென்று இருக்கிறார்.  அப்போது அறையின் கதவு உட்புறமாக பூட்டப்பட்டு இருந்திருக்கிறது.   கதவை திறக்கும்படி பலமுறை வார்டன் தட்டி இருக்கிறார்.  எந்த பதிலும் இல்லாததால் கெங்கேரி போலீசாரிடம் தகவல் தெரிவிக்க , கெங்கேரி போலீசார் விரைந்து வந்து விடுதியில்  கதவை உடைத்து உள்ளே சென்று இருக்கிறார்கள்.  

 அப்போது மாணவி ஷிவானி மின்விசிறியில்  சடலமாக தொங்கி இருந்திருக்கிறார்.   ஷிவானி எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்பது குறித்து இதுவரைக்கும் எந்தவித தற்கொலை கடிதமும், தடயங்களும் சிக்கவில்லை .  அதனால், கெங்கேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து மாணவியின் மரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 கல்லூரி விடுதியில் மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கெங்கேரி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.