தமிழர்கள் ஏன் இந்தி பேச வேண்டும்? மக்களுக்கு பேச விரும்பும் மொழியை தீர்மானிக்கும் உரிமை அவசியம்.. சோனு நிகம்

 
சோனு நிகம்

ஏன் இந்தி பேச வேண்டும்? மக்கள் தாங்கள் பேச விரும்பும் மொழியை தீர்மானிக்கும் உரிமையை பெற்றிருக்க வேண்டும் என பிரபல பாடகர் சோனு நிகம் தெரிவித்தார்.

கன்னடத்தில் பிரபல நடிகரான சுதீப் கடந்த சில தினங்களுக்கு முன் நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில், இந்தி நமது தேசிய மொழி அல்ல என்று கூறினார். இதனையடுத்து பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன், தென்னிந்திய மொழி படங்கள் ஏன் இந்தியில் டப் செய்யப்படுகிறது என்று சுதீப்புக்கு பதிலடி கொடுத்தார். இதனையடுத்து நாடு முழுவதும் இந்தி மொழி குறித்த விவாதம் அனல் பறந்தது. இந்நிலையில், இந்திய அரசியலமைப்பில் இந்தி தேசிய மொழியா எழுதப்படவில்லை, தமிழன் ஏன் இந்தி பேச வேண்டும் பிரபல பாடகர் சோனு நிகம் தெரிவித்தார்.

அஜய் தேவ்கன், சுதீப்

32 மொழிகளில் பாடிய பிரபல பாலிவுட் பாடகர் சோனு நிகம் ஒரு நிகழ்ச்சியில் பேசுகையில் மொழி தொடர்பாக தனது கருத்தை தெரிவிக்கையில் கூறியதாவது: எனக்கு தெரிந்தவரை, இந்திய அரசியலமைப்பில் இந்தி தேசிய மொழியாக எழுதப்படவில்லை. இது தொடர்பாக நிபுணர்களிடமும் ஆலோசனை நடத்தியுள்ளேன். நாட்டில் அதிகம் பேசப்படும் மொழி இந்தி, எனக்கு புரிகிறது. அப்படி சொன்னால் தமிழ் உலகின் மூத்த மொழி என்பது நமக்கு தெரியுமா? சமஸ்கிருதத்திற்கும், தமிழுக்கும் இடையே விவாதம் நடக்கிறது. உலகம் முழுவதிலும் உள்ள பழமையான மொழி தமிழ் என்று மக்கள் கூறுகிறார்கள். 

மொழிகள்

நாட்டில் பிரச்சினைகள் குறைவாக உள்ளதா, நமக்கு புதியது (பிரச்சினை) தேவையா. ஒரு மொழியை பிறர் மீது திணித்து நாட்டில் நல்லிணக்கத்தை சீர்குலைக்கிறோம். நீ தமிழன் இந்தி பேச வேண்டும் சொல்கிறார்கள், அவர்கள் ஏன் இந்தி பேச வேண்டும்? மக்கள் தாங்கள் பேச விரும்பும் மொழியை தீர்மானிக்கும் உரிமையை பெற்றிருக்க வேண்டும். இதையெல்லாம் (மொழி பிரச்சினை) விடுங்கள், அவர்கள் சாந்தமாகட்டும், ஒரு பஞ்சாபி பஞ்சாபி பேச வேண்டும், தமிழர்கள் தமிழ் பேச வேண்டும், அவர்களுக்கு ஆங்கிலம் வசதியாக இருந்தால் அதில் பேசுவார்கள். நம் நீதிமன்றங்களிலும், தீர்ப்புகளும் ஆங்கிலத்தில் உள்ளன. விமான பணிப்பெண்களும் ஆங்கில மொழியை விரும்புகிறார்கள். இவ்வாறு அவர் தெரிவித்தார்.