பாலியல் பலாத்கார வழக்கில் தேடப்படும் அமைச்சரின் மகன்

 
ro

 ராஜஸ்தான் மாநிலத்தில் முதல்வர் அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது.   முதல்வருக்கு நெருக்கமான அமைச்சர்களின் ஒருவர் மகேஷ் ஜோஷி.  இந்த அமைச்சரின் மகன் ரோகித் ஜோஷி.  இவர் மீது கடந்த வாரம் இளம் பெண் ஒருவர் பாலியல் பலாத்கார புகார் தெரிவித்து பரபரப்பு ஏற்படுத்தி இருந்தார்  

 அமைச்சர் மகனின் மீது இளம்பெண் கொடுத்த புகாரில் வழக்கு பதிவு செய்யப்பட்டு அவரை போலீசார் தேடி வருவதால்  ராஜஸ்தான் மாநிலம் முழுவதும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.   

m

கடந்த ஆண்டு ஜனவரி 8ஆம் தேதி முதல் கடந்த ஏப்ரல் 17ஆம் தேதி வரை ரோகித் ஜோஷி பலமுறை தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக அந்த பெண் தனது குற்றச்சாட்டில் கூறியிருக்கிறார்.   அந்த பெண்ணுக்கு கருச்சிதைவு ஏற்பட்டதாகவும்  கூறி இருக்கிறார். 

 இளம்பெண் கொடுத்த இந்த புகாரின் அடிப்படையில் ஜெய்ப்பூரில் இருக்கும் மகேஷ் ஜோஷி இல்லத்திற்கு போலீஸ் சென்றிருக்கிறார்கள்.   அங்கு ரோஹித் ஜோஷியை கைது செய்வதற்காக சென்றிருக்கிறார்கள்.  ஆனால் ரோகித் ஜோஷி அங்கு இல்லை.  அவர் தலைமறைவாகிவிட்டார் என்பதை போலீசார் உணர்ந்ததால்,  ரோஹித் ஜோஷியை பிடிக்க 20 போலீஸ் அதிகாரிகள் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டிருக்கிறது. 

 இதன் பின்னர் ரோகித் ஜோஷியை பிடிப்பதற்கு அதிகாரிகள் அமைச்சரின் வீட்டிற்கு சென்றிருக்கிறார்கள்.   அங்கேயும் ரோஹித் இல்லை.  அமைச்சரின் இன்னொரு வீட்டிற்கு போலீசார் விரைந்துள்ளனர்.  அங்கேயும் இல்லை என்று தெரியவந்ததால்,  அவர் தலைமுறை ஆகிவிட்டார் என்பது தெரிய வந்திருக்கிறது. 

 அமைச்சர் மகன் மீது போதைப்பொருள் பயன்படுத்துதல்,  கிரிமினல் மிரட்டல் , பாலியல் பலாத்காரம்  பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. பாலியல் பலாத்கார வழக்கில் அமைச்சரின் மகன் தலைமறைவாகி இருப்பது ஆட்சிக்கும் கட்சிக்கும் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியிருக்கிறது என்று  முதல்வர் அசோக் கெலாட் அப்செட்டில் இருக்கிறாராம்.