தாயின் உடலை 40 கிலோ மீட்டர் மகன் சுமந்து சென்ற அவலம்! அதிர்ச்சி வீடியோ

 
ட்

ஆம்புலன்ஸ் டிரைவர் 3000 ரூபாய் கட்டணம் கேட்டதால் அதை செலுத்த வழி இல்லாமல் போனதால் இறந்து போன தாயின் உடலை சுமந்து கொண்டு 40 கிலோ மீட்டர் வரை சென்றிருக்கிறார் மகன்.  மேற்கு வங்கத்தில் நடந்திருக்கிறது இந்த அவலம்.

 மேற்கு வங்க மாநிலத்தில் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது.   அம்  மாநிலத்தில் ஜல்பகுரி மாவட்டத்தில் கிராந்தி என்கிற பகுதியைச் சேர்ந்தவர் ராம் பிரசாத் .  இவர் சுவாசக் கோளாறு நோயினால் பாதிக்கப்பட்ட 72 வயதான தனது தாயை ஜல்பைகுரி  அரசு மருத்துவமனையில் சேர்த்து இருக்கிறார். 


அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று முன்  தினம் உயிரிழந்து விட்டார்.  இதன் பின்னர் தாயின் உடலை எடுத்துச் செல்வதற்காக ஆம்புலன்ஸ் கேட்டிருக்கிறார் ராம் பிரசாத் .  ஆனால்  900 ரூபாய் என்கிற நிர்ணய கட்டத்திற்கு எதிராக 3000 ரூபாய் கேட்டிருக்கிறார்.  அந்த அளவு பணம் ராம் பிரசாத்திடம் இல்லாததால் தாயின் உடலை தோளிலேயே சுமந்து சென்று இருக்கிறார்.  40 கிலோ மீட்டர் வரை இப்படி தாயின் உடலை தொழில் சுமந்து சென்று இருக்கிறார் .

இது குறித்த வீடியோ வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.  பலரும் அந்த ஆம்புலன்ஸ் டிரைவருக்கும் மருத்துவமனைக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் அந்த அரசு மருத்துவமனையின் கண்காணிப்பாளர் கல்யாண் இது குறித்து விளக்கம் அளித்து இருக்கிறார்.  இந்த சம்பவம் துரதிர்ஷ்டவசமானது என்று தெரிவித்திருக்கிறார்.

அவர் மேலும்,  ஆம்புலன்ஸ் கட்டணம் செலுத்த போதுமான கட்டணம் இல்லை என்று ராம் பிரசாத் கூறி இருந்தால் நாங்களே வாகனம் ஏற்பாடு செய்து கொடுத்திருப்போம்.  அதிக கட்டணம் கேட்ட ஆம்புலன்ஸ் அனைவரும் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று  உறுதி கூறியிருக்கிறார்