கீரை பொரியலில் பாம்பு தலை - அதிர்ச்சி வீடியோ

 
sன்


கீரை பொரியலில் பாம்பு தலை இருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்து அந்த நபர் சாப்பிடுவதை நிறுத்திவிட்டு அதை வீடியோ எடுத்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தெரிவித்திருக்கிறார்.  அந்த வீடியோவை வலைத்தளங்களில் பதிவிட அது வைரல் ஆகி பலரையும் அதிர வைத்து வருகிறது .

ச்

பிரியாணி உள்ளிட்ட அசைவ சாப்பாட்டில் அடிக்கடி பல்லி, தவளை,  கரப்பான் பூச்சி ஆகியவை கிடப்பதாக அதுவும் பிரபல உணவகங்கள் தயாரித்து தரும் உணவில் கிடப்பதாக பலரும் வீடியோ ஆதாரங்களுடன் வெளியிட்டு புகார் கொடுத்து வரும் நிலையில் , சைவ உணவிலும் பாம்பு தலை கிடந்திருக்கிறது.   கீரை பொரியல், உருளைக்கிழங்கு பொடிமாஸ் உள்ளிட்டவற்றுடன்  பாம்பு தலை கிடந்ததும், காய்கறி என்று முதலில் அந்த நபர் நினைத்திருக்கிறார்.  விமானத்தில் ஊழியருக்கு வழங்கப்பட்ட உணவில் இது நிகழ்ந்திருக்கிறது.

 துருக்கி நாட்டின் தலைநகர் அங்காராவில் இருந்து ஜெர்மனிக்கு கடந்த 21ஆம் தேதி அன்று சன் எக்ஸ்பிரஸ் விமானம் புறப்பட்டுச் சென்று இருக்கிறது.  அந்த விமானத்தில் இருந்த ஊழியர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட உணவு எடுத்து சாப்பிட்டு இருக்கிறார்க.  ள் அப்போது ஒரு ஊழியரின் உணவில் கீரை உருளைக்கிழங்குகளுடன் பச்சையாக ஏதோ வித்தியாசமாக தெரிய,  முதலில் அதை காய்கறி என்று நினைத்திருக்கிறார் . 

ச

ஆனால் அது என்ன காய்கறி என்று கவனித்த போது தான் கடும் அதிர்ச்சி அடைந்திருக்கிறார்.   அது வெட்டப்பட்ட பாம்பின் தலை என்பது தெரிய வந்து கடும் அதிர்ச்சி அடைந்த அவர் ,  மேல் அதிகாரிகளிடம் புகார் செய்திருக்கிறார்.    அதை வீடியோவாக எடுத்து சமூக வலைத்தளத்திலும் அவர் பதிவிட்டு இருக்கிறார். 

 இதை அடுத்து விசாரணை நடத்தி விமானத்திற்கு உணவு வழங்கும் அந்த நிறுவனத்தின் ஒப்பந்தம் நிறுத்தப்பட்டிருக்கிறது.   ஆனால் விமானத்திற்கு உணவு வழங்கும் அந்த நிறுவனமும் இதை மறுத்து இருக்கிறது.  நாங்கள் சமைக்கும் உணவுகள் தரமாகவே இருக்கும்.  இது வேண்டுமென்றே எங்களை பழிவாங்க வேண்டும் என்பதற்காகவே யாரோ திட்டமிட்டு இப்படி செய்திருக்கிறார்கள்  என்கிறது அந்த நிறுவனம்.

க்க்

 விமான நிலைய அதிகாரிகள் இது குறித்து மேலும்  விசாரணை நடத்தி வருகின்றனர்.   விமானத்தில் ஊழியருக்கு கொடுத்த உணவில் பாம்பு தலை இருக்கும் வீடியோ வைரலாகி பலரையும் அதிர வைக்கிறது.   தொடர்ந்து இப்படி உணவு விஷயத்தில் பலரும் அலட்சியமாக இருப்பது  மக்களையும் பெரும் பீதிக்கு உள்ளாக்கி இருக்கிறது.