எதிர்வரும் கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் கோலார் தொகுதியில் போட்டி... சித்தராமையா அறிவிப்பு

 
அப்படியே ‘ஆபரேஷன் லோட்டஸ்’ குறித்தும் சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவு போடுங்க.. எடியூரப்பாவை நக்கல் செய்த சித்தராமையா…..

எதிர்வரும் கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் கோலார் சட்டப்பேரவை தொகுதியில் போட்டியிட உள்ளதாக காங்கிரஸின் மூத்த தலைவர் சித்தராமையா அறிவித்துள்ளார்.

கர்நாடகாவில் முதல்வர் பசவராஜ் பொம்மை தலைமையில் பா.ஜ.க. ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டில் அம்மாநில சட்டப்பேரவைக்கு புதிய உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் ஆளும் கட்சியான பா.ஜ.க.., முக்கிய எதிர்க்கட்சிகளான காங்கிரஸ் மற்றும் மதச்சார்ப்பற்ற ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகள் தேர்தலுக்கான பணிகளை மேற்கொண்டு வருகின்றன.

காங்கிரஸ்

இந்த சூழ்நிலையில், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், அம்மாநில முன்னாள் முதல்வருமான சித்தராமையா எதிர்வரும் கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில், கோலார் சட்டப்பேரவை தொகுதியில் போட்டியிட உள்ளதாக தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சித்தராமையா கூறியதாவது: கோலார் தொகுதி மக்கள், மாவட்ட மக்கள் மற்றும் கோலார் மாவட்ட தலைவர்கள், கே.எச்.முனியப்பா உள்ளிட்டோர் என்னை கோலார் சட்டப்பேரவை தொகுதியில் போட்டியிட வேண்டும் என விரும்பினர்.

பா.ஜ.க.

அவர்களின் கருத்துக்கு மதிப்பளித்து, நான் அங்கு போட்டியிடுகிறேன். இவ்வாறு அவர் தெரிவித்தார். கோலார் சட்டப்பேரவை தொகுதியில் தலித்துக்கள், குருபர்கள் மற்றும் முஸ்லிம்களை உள்ளடக்கியது. இந்த தொகுதியில் பா.ஜ.க. பலவீனமாக உள்ளதாக கருதப்படுகிறது. இதனால் சித்தராமையா கோலார் தொகுதியில் நிச்சயம் வெற்றி பெறுவார் என கூறப்படுகிறது.