கோலார் தொகுதியில் எனக்கு எதிராக மோடி மற்றும் அமித் ஷா பிரச்சாரம் செய்தாலும் நான் வெற்றி பெறுவேன்.. சித்தராமையா உறுதி

 
அப்படியே ‘ஆபரேஷன் லோட்டஸ்’ குறித்தும் சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவு போடுங்க.. எடியூரப்பாவை நக்கல் செய்த சித்தராமையா…..

எதிர்வரும் கர்நாடக சட்டப்பேரவை தொகுதியில்,  கோலார் தொகுதியில் எனக்கு எதிராக மோடி மற்றும் அமித் ஷா பிரச்சாரம் செய்தாலும் நான் வெற்றி பெறுவேன் என்று அம்மாநில காங்கிரஸின் மூத்த தலைவர் சித்தராமையாக நம்பிக்கையுடன் உறுதியாக தெரிவித்தார்.

கர்நாடகாவில் முதல்வர் பசவராஜ் பொம்மை தலைமையில் பா.ஜ.க. ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு மே மாதத்தில் அம்மாநில சட்டப்பேரவைக்கு புதிய உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கர்நாடக சட்டப்பேரவை தேர்தலுக்கான தேதியை இந்திய தேர்தல் ஆணையம் இன்னும் அறிவிக்கவில்லை. இருப்பினும்,  ஆளும் கட்சியான பா.ஜ.க.., முக்கிய எதிர்க்கட்சிகளான காங்கிரஸ் மற்றும் மதச்சார்ப்பற்ற ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகள் தேர்தலுக்கான பணிகளை மேற்கொண்டு வருகின்றன.

பா.ஜ.க.

இந்த சூழ்நிலையில், அண்மையில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், அம்மாநில முன்னாள் முதல்வருமான சித்தராமையா எதிர்வரும் கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில், கோலார் சட்டப்பேரவை தொகுதியில் போட்டியிட உள்ளதாக தெரிவித்தார். சித்தராமையா கோலார் தொகுதியில் போட்டியிட போவதாக அறிவித்தது முதல், அந்த தொகுதியில் அவருக்கு எதிராக எதிர்மறையான பிரச்சாரம் நடைபெற்று வருவதாகவும், கோலார் மாவட்டத்தில் அவருக்கு எதிராக கையேடு விநியோகப்படுவதாகவும் செய்திகள் வெளியாகின.

அமித் ஷா, மோடி

இது தொடர்பாக சித்தராமையாவிடம் செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு சித்தராமையா பதிலளிக்கையில் கூறியதாவது: பா.ஜ.க. தேசிய பொதுச் செயலாளர் பி.எல்.சந்தோஷ், பா.ஜ.க. தேசிய தலைவர் ஜெ.பி. நட்டா, பிரதமர் நரேந்திர மோடி அல்லது மத்திய உள்துள அமைச்சர் அமித் ஷா ஆகியோர் கோலார் தொகுதிக்கு வந்து எனக்கு எதிராக செய்யப்பட்டும். ஆனால் கோலார் தொகுதியில் நான் நிச்சயம் வெற்றி பெறுவேன். 2018 சட்டப்பேரவை தேர்தலில் நான் போட்டியிட்ட பாதாமி தொகுதியில் அமித் ஷா மற்றும் மூத்த பா.ஜ.க. தலைவர்களின் பிரச்சாரத்தையும் மீறி நான் வெற்றி பெற்றேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.