ஷ்ரத்தா கொலை - 6 ஆயிரம் பக்க குற்றப்பத்திரிகை தாக்கல்

 
m

நாட்டையே உலுக்கி எடுத்த இளம் பெண் ஷ்ரத்தா கொலை வழக்கில் காதலன் அப்தாப் அமீன் மீது 6000 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு இருக்கிறது. 

 மகாராஷ்டிரா மாநிலத்தில் மும்பை பகுதியைச் சேர்ந்த அப்தாப் அமீன் புனேவாலா- இளம்பெண் ஷ்ரத்தா இருவரும் டெல்லியில் வேலை செய்து வந்த போது ஏற்பட்ட பழக்கத்தில் காதலித்து வந்துள்ளனர்.   பின்னர் திருமணம் செய்து கொள்ளாமலேயே ஒரே வீட்டில் வசித்து வந்துள்ளனர்.

s

 இந்த நிலையில் கடந்த ஆண்டு மே மாதம் 18ம் தேதி அன்று காதலி ஷ்ரத்தாவை கொடூரமாக கொன்று அவரது உடலை 35 துண்டுகளாக வெட்டி ஒவ்வொரு துண்டுகளாக வெளியே எடுத்துச் சென்று அப்புறப்படுத்தி இருக்கிறார்.   இது குறித்து செய்திகள் வெளியாகி நாடெங்கிலும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தின.

 அந்த இளைஞர் அப்தாப் அமீனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.   இந்த கொடூர குற்றவாளி மீதுடெல்லி போலீசார் 6629 பக்க குற்றப்பத்திரிகையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளனர்.  அந்த குற்ற பத்திரிகையில் 3000 பக்கங்களில் 100க்கும் மேற்பட்ட சாட்சியங்கள், கொடூர கொலையாளி  பயன்படுத்திய கூர்மையான ஆயுதங்கள்,  புதைத்து வைத்திருந்த எலும்புக்கூடுகளை தடயவியல் அறிவியல் சோதனைக்கு உட்படுத்திய அறிக்கை விவரங்கள் இருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.