பஞ்சாபில் பட்டப்பகலில் துப்பாக்கிச் சூடு : சிவசேனா மூத்த தலைவர் சுதிர் சூரி பலி..

 
பஞ்சாபில் பட்டப்பகலில் துப்பாக்கிச் சூடு : சிவசேனா மூத்த தலைவர் சுதிர் சூரி பலி..


பஞ்சாப்  மாநிலத்தில் நடந்த துப்பாக்கி சூட்டில் சிவசேனா மூத்த தலைவர் சுதிர் சூரி உயிரிழந்தார்.  

பஞ்சாப் மாநிலம்  அமிர்தரஸில் உள்ள கோயில் ஒன்றில் கடவுள் சிலை குப்ப்ஐயில் வீசப்பட்டதற்கு எதிராக  சிவசேனா கட்சி சார்பில் போராட்டம் நடைபெற்றது . மிர்தசரசில் உள்ள கோவிலுக்கு வெளியே சிவசேனா தலைவர் சுதிர் சூரி தலைமையில் தர்ணா போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தின் போது பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த, காவல்துறை அதிகாரிகளிடம் சுதிர் சூரி பேசிக்கொண்டிருந்தார். அப்போது குடியிருப்பு பகுதியில் இருந்து மர்ம நபர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டுள்ளார்.  

பஞ்சாபில் பட்டப்பகலில் துப்பாக்கிச் சூடு : சிவசேனா மூத்த தலைவர் சுதிர் சூரி பலி..

இதில் 2 துப்பாக்கி குண்டுகள் சுதிர் சூரியின் மீது பாய்ந்ததில், அவர் ரத்த வெள்ளத்தில் சரிந்தார். உடனடியாக அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு  மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்நிலையில்   மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சுதிர்  சூரி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பட்டப்பகலில்  தர்ணாவின் போது சிவசேனா மூத்த தலைவர்  சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.