அதிர்ச்சி வீடியோ! 3ம் வகுப்பு மாணவியை கொடூரமாக தாக்கிய ஆசிரியர்

 
te

மூன்றாம் வகுப்பு மாணவியை ஆசிரியர் கொடூரமாக தாக்கும் அதிர்ச்சி வீடியோ வலைத்தளங்களில் வைரல் ஆகி வருகிறது.  கணக்கு பாடத்தில் தவறு செய்து விட்டதால் அந்த ஒன்பது வயது மாணவியை இப்படி  கொடூரமாக அடித்திருக்கிறார் ஆசிரியர்.  மேலும் பல மனைவிகளையும் அவர் தொடர்ச்சியாக இப்படி அடித்திருக்கிறார். அதனால் தான் வகுப்பறைக்கு  ஒருவர் வெளியே நின்று அதை வீடியோ எடுத்து வெளி உலகத்திற்கு கொண்டு வந்திருக்கிறார். அரசு பெண்கள் ஆரம்ப பள்ளியில் இந்த சம்பவம் நிகழ்ந்திருக்கிறது.

 மத்திய பிரதேச மாநிலத்தில் ரத்லம் மாவட்டத்தில் உள்ள மாமத் கெடா கிராமத்தில் இயங்கி வருகிறது அந்த அரசு பள்ளி.  இப்பள்ளியில் உள்ள  மூன்றாவது வகுப்பில் மொத்தம் 15 மாணவிகள் படித்து வருகிகிறார்கள் .    ஆசிரியர் ஜினேந்திர மோக்ரா,  மாணவிகளுக்கு கணக்கு பாடத்தின் போது ஆசிரியர் போர்டில் எழுதி வைத்ததை சொல்ல சொல்லி இருக்கிறார் . 

c

அந்த 9வயது மாணவி  34 எண்கள் வரைக்கும் சரியாக சொல்லிவிட்டு 35 என்ற எண்ணை சொல்லும் போதே தடுமாறி இருக்கிறார்.   இதனால் ஆசிரியர் அந்த மாணவியை இழுத்து பளார் என்று கன்னத்தில் அறைகிறார்.  பின்னர் தலையில் தட்டி அடிக்கிறார்.   அந்த மாணவி அங்கிருந்து செல்லும் போது ஆவேசமாக பின்னால் ஓடிச் சென்று கண்ட கண்ட வார்த்தைகளில் திட்டுகிறார்.  மீண்டும் தலையில் அடித்து திட்டுகிறார்.  

 இதேபோல் பல மாணவிகளுக்கு இப்படி செய்து இருக்கிறார்.  இதை கவனித்து விட்டு தான் ஒருவர் வெளியில் இருந்து செல்போனில் வீடியோவாக எடுத்து இருக்கிறார். அந்த வீடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியதை அடுத்து அந்த ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பலரும் பன்னடம் தெரிவித்து வந்த நிலையில் அந்த ஆசிரியர் ஜெயந்திர மோக்ராவை   மாவட்ட கல்வி அலுவலர் கே சி. சர்மா நடவடிக்கை எடுத்திருக்கிறார்.   ஆசிரியரை சஸ்பெண்ட் செய்து நடவடிக்கை எடுத்திருக்கிறார்.