அதிர்ச்சி வீடியோ! பஸ்சில் ஏறிய பயணியின் மார்பில் எட்டி உதைத்து தள்ளிய நடத்துனர்

 
bus

பஸ்ஸில் ஏற வந்த பயணியை மார்பில் எட்டி உதைத்து கீழே தள்ளி இருக்கிறார் நடத்துனர்.   இதில் அந்த பயணி மயக்கம் அடைந்து அங்கேயே கிடைக்கிறார்.  கொஞ்சம் கூட ஈவு இரக்கமில்லாமல் அந்த நடத்துனர் பேருந்து எடுத்துக் கொண்டு செல்கிறார்.   இந்த வீடியோ வைரலாகி கடும்  அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது .

k

கர்நாடக மாநிலத்தில் தென் கன்னட மாவட்டத்திற்கு உட்பட்ட ஈஸ்வர மங்களா நகர் சந்திப்பில் அரசு பேருந்தில் பயணி ஒருவர் ஏற முற்படுகிறார்.  அப்போது நடத்துனர் அந்த பயணியை தடுக்கிறார்.  அதையும் மீறி அந்த பயணி ஏற முற்பட்ட போது அவரின் கையில் இருந்த குடையை பிடுங்கி சாலையில் வீசுகிறார்.  குடை போனாலும் பரவாயில்லை என்று அந்த பயணி பேருந்தின் மேலே ஏறி விட்டார்.

 இதனால் கடும் மாத்திரம் அடைந்து நடத்துனர் அந்த பயணியை அடித்து கீழே  தள்ளுகிறார். அடி வாங்கிக்கொண்டே அந்த பயணிர் படிக்கட்டில் நிற்கிறார்.  அப்போது அந்த பயணியின்  மார்பில் ஓங்கி உதைக்கிறார்.  இதில் அந்த பயணி படார் என்று சாலையில் விழுந்து மல்லாக்க மயங்கி கிடக்கிறார்.   கொஞ்ச நேரம் அந்த பயணியை பதற்றத்துடன் பார்க்கிறார் நடத்தினர்.   பின்னர் பேருந்தை எடுத்துக் கொண்டு சென்று விடுகிறார்.

u

 இதை பேருந்து நிறுத்தத்தில் இருந்த பயணிகள் சிலர் வீடியோ எடுத்து இணையதளத்தில் வெளியிட்டுள்ளனர்.   இதை பார்த்த பலரும் கண்டனம் தெரிவித்து வந்த நிலையில்,   கே. எஸ். ஆர். டி. சி நிர்வாகம் விசாரணை நடத்தி வருகிறது.  

 முதற்கட்ட விசாரணையில் பயணியிடம் மனிதாபிமானம் மற்ற முறையில் நடந்து கொண்ட அந்த நடத்துனர் சுப்புராய்  என்பது தெரிய வந்திருக்கிறது.  அந்த பயணி குடிபோதையில் இருந்ததால் பேருந்தில் ஏற மறுத்திருக்கிறார் நடத்துனர்.   ஆனால் அந்த பயணி பேருந்தில் ஏற பிடிவாதமாக இருந்ததால் அவரை அடித்து உதைத்து தள்ளி கீழே தள்ளி இருக்கிறார் நடத்துனர்.  

 என்னதான் இருந்தாலும் அடித்து உதைத்து கீழே தள்ளியது மனிதாபிமானமற்ற செயல் என்று சொல்லி அந்த நடத்துனர் பணி நீக்கம் செய்ய கர்நாடக மாநில போக்குவரத்துக் கழகம் உத்தரவிட்டுள்ளது.   பாதிக்கப்பட்ட அந்த பயணியின் மருத்துவ செலவுகளை கே. எஸ் .ஆர். டி . சி நிர்வாகமே ஏற்றுக் கொள்ளும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.