கன்னித்தன்மை சோதனையில் அதிர்ச்சி! மணமகளுக்கு அடி,உதை -10 லட்சம் அபராதம்

 
v


 கன்னித்தன்மை சோதனையில் மணமகள் தோல்வியடைந்ததால் ஆத்திரமடைந்த மணமகனின் குடும்பத்தினர் அவரை அடித்து உதைத்து துன்புறுத்தி உள்ளனர்.  10 லட்சம் ரூபாய் அபராதம் கேட்டும் பஞ்சாயத்து கூட்டி இருக்கிறார்கள்.   

 ராஜஸ்தான் மாநிலத்தில் பில்வாரா என்கிற கிராமத்தில் சன்சி என்கிற நாடோடி சமூகம். வாழ்ந்து வருகின்றனர்.   இந்த சமூகத்தை சேர்ந்த 24 வயது இளம்பெண் ஒருவருக்கு திருமணம் நடந்துள்ளது.  

te

 சன்சி சமூகத்தின் குக்காடி பிரதா என்கிற பாரம்பரிய வழக்கப்படி திருமணம் முடிந்ததும் அந்த பெண்ணுக்கு கன்னித்தன்மை சோதனை செய்யப்படும்.  அப்படி அந்த பெண்ணுக்கும் கன்னித்தன்மை சோதனை நடத்தப்பட்டு இருக்கிறது.   அந்த சோதனையில் அவர் தோல்வி அடைந்திருக்கிறார் .  ஏற்கனவே கன்னி கழித்து விட்டார் என்பது தெரிய வந்திருக்கிறது.

 இதனால் ஆத்திரமடைந்த மணமகன் குடும்பத்தார் அந்த பெண்ணை அடித்து உதைத்து துன்புறுத்தி இருக்கிறார்கள்.   வலி தாங்க முடியாத அந்த பெண்,  பாலியல் வன்கொடுமைக்கு உள்ளானேன் என்று சொல்லி கதறி அழுதிருக்கிறார்.   இதன் பின்னர் அந்த பெண் காவல் நிலையம் சென்று மணமகன் வீட்டர் மீது புகார் அளித்துள்ளார்.  ஆனாலும் உண்மையை மறைத்து விட்டதால் கோபத்தில் இருந்த மணமகன் குடும்பத்தினர் உள்ளூர் பஞ்சாயத்தை கூட்டி அந்த பெண்ணுக்கு 10 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்துள்ளனர்.

 இதன் பின்னர் புதுமண பெண் அடித்து உதைக்கப்பட்டது தொடர்பாக காவல் நிலையத்தில் பெண் வீட்டார் அளித்த புகாரின் பேரில் கணவர் மீதும் கணவர் வீட்டார் மீதும் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.