பிரதமர் மோடி, குஜராத் முதல்வராக இருந்திருக்காவிட்டால், சர்தார் சரோவர் அணை இருந்திருக்காது... சிவ்ராஜ் சிங் சவுகான்

 
சர்தார் சரோவர் அணை

பிரதமர் மோடி, குஜராத் முதல்வராக இருந்திருக்காவிட்டால், சர்தார் சரோவர் அணை இருந்திருக்காது என்று மத்திய பிரதேச முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் தெரிவித்தார்.

மத்திய பிரதேசம் இந்தூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஒன்றில் கலந்து கொண்ட அம்மாநில முதல்வர் சிவராஜ் சவுகான் பேசுகையில் கூறியதாவது:  நான் மத்திய பிரதேச முதல்வராக இருந்தபோது பிரதமர் மோடி குஜராத் முதல்வராக இருந்தார். அணைக்கு எதிரான மக்களின் செயல்திட்டத்தை வெளியே கொண்டு வர இருவரும் முடிவு செய்தோம். பிரதமர் மோடி, குஜராத் முதல்வராக இருந்திருக்காவிட்டால், சர்தார் சரோவர் அணை இருந்திருக்காது. 

மத்திய பிரதேசத்தில் பா.ஜ.க.வின் வெற்றி பெரிதாக இருக்கும்… முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் நம்பிக்கை

இது (சர்தார் சரோவர் அணை) இரு மாநிலங்களின் நலனுக்கானது என்பதை அவர் அறிந்திருந்தார். நர்மதா நதி மத்திய பிரதேசம் மற்றும் குஜராத் ஆகிய இரு மாநிலங்களிலும் முக்கியமானது. அதன் காரணமாக இரு மாநிலங்களும் செழித்து வருகின்றன. நர்மதா நதியில் அணை கட்டும் திட்டத்தை எதிர்த்து பலர் பல தடைகளை உருவாக்கினர். இவ்வாறு அவர் தெரிவித்தார். குஜராத் மாநிலம் நர்மதா மாவட்டத்தில் நர்மதா ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட அணையாகும். 

மோடி

மோடி@20 என்ற புத்தகத்தின் வெளியீட்டு விழாவை ஒட்டி பல நிகழ்ச்சிகளை பா.ஜ.க. ஏற்பாடு செய்து வருகிறது. இந்த புத்தக வெளியீட்டாளர்களின் கருத்துப்படி, இந்த புத்தகம் கடந்த 20 ஆண்டுகளில் மோடியின் தனித்துவமான மாதிரியான ஆட்சியின் காரணமாக குஜராத் மற்றும் இந்தியாவின் அடிப்படை மாற்றத்தை ஆய்வு செய்ய முயற்சி செய்கிறது என தெரிவித்தார்.